Home
Computer

புதிய ஆன்ட்ராய்டு அப்கிரேடுடன் சாம்சங் கேலக்ஸி 10.1 டேப்!

By Super

புதிய ஆன்ட்ராய்டு அப்கிரேடுடன் சாம்சங் கேலக்ஸி 10.1 டேப்!
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி டேப் 10.1ல் ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம்ப் பர்ம்வேரை அப்டேட் செய்ய இருக்கிறது. இந்த அப்டேட் மூலம் கேலக்ஸி 10.1 டேப்லெட்டில் பல புதிய வசதிகளை பெற முடியும்.

கேலக்ஸி டேப் 10.1 சாம்சங்கின் சிறந்த டேப்லெட் ஆக இருக்கிறது. இந்த டேப்லெட் மிகவும் மெல்லியதாகவும், குறைந்த எடையுடன் உள்ளது. இதன் டிஎப்டி கப்பாசிட்டிவ் டச் திரை 10.1 இன்ச் அளவைக் கொண்டது.

இது 800 x 1280 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. அதுபோல் இது 16 மில்லியன் நிற அடர்த்தியை சப்போர்ட் செய்யும். மேலும் இதன் பிக்சல் அடர்த்தி 149பிபிஆ ஆகும். அதுபோல் இது டச்விஸ்யுஎக்ஸ் யுசர் இன்டர்பேஸைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி டேப் 10.1 டூவல் கோர் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஆர்ம் கோர்டெக்ஸ்-எ9 பிராசஸரைக் கொண்டுள்ளது. இதன் வேகம் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஆகும். இது ஜிஇபோர்ஸ் கிராபிக் பிராசஸர் யூனிட்டையும் கொண்டுள்ளது.

இந்த டேப்லட் பலவிதமான சேமிப்பு அளவுகளில் வருகிறது. அதாவது 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64 ஜிபி போன்ற சேமிப்பு அளவுகளில் வருகிறது. அதனால் நமக்கு விருப்பமான அளவு கொண்ட டேப்லெட்டைத் தேர்ந்து கொள்ளலாம். ஆனால் இதில் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு இல்லாததால் இதன் மெமரியை விரிவுபடுத்த முடியாது. அதுபோல் இந்த டேப்லெட்டின் மொத்த மெமரி 1 ஜிபி ஆகும்.

இது 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் 3 மெகா பிக்ஸல் ரியர் கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் வசதிகளைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த கேமரா 720பி ரிசலூசன் கொண்ட வீடியோவை ரிக்கார்ட் செய்யும். இதன் 2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமரா வீடியோ காலிங் செய்வதற்கும் மிக உறுதுணையாக இருக்கும்.

முதலில் கேலக்ஸி டேப் ஆன்ட்ராய்டு 3.1 ஹன்கோம்ப் இயங்குதளத்தில் இயங்கியது. பின் அது ஆன்ட்ராய்டு 3.2 வெர்சனால் அப்டேட் செய்யப்பட்டது. தற்போது கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய இயங்குதளத்தை சாம்சங் தனது கேலக்ஸி 10.1 டேப்பில் அப்டேட் செய்ய இருக்கிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய டேப்லெட் அடுத்த ஆண்டு மத்தியில் வரும் என்று தெரிகிறது. தற்போது வரும் இந்த அப்டேட் செய்யப்பட்ட கேலக்சி டேப்லெட்டின் விலை ரூ.30,000 ஆக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X