ஆன்ட்ராய்டு கேம்களுடன் அமேசான் கிண்டில் டேப்லெட்!

Posted By: Staff
ஆன்ட்ராய்டு கேம்களுடன் அமேசான் கிண்டில் டேப்லெட்!
அதி நவீன வசதிகளுடன் அமேசான் கிண்டில் பயர் டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் சிறந்த வசதிகளோடு பக்காவன செயல் திறனுடன் கொண்டதாக விற்பனைக்கு வருகிறது. இது பட்ஜெட் விலை கொண்டதாகவும் இருப்பதால் மார்க்கெட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வீடியோ கேம் பிரியர்களை மயக்க வேண்டும் என்பதற்காகவே இதில் ஏராளமான வீடியோ கேம்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான வீடியோ கேம் அப்ளிகேசன்கள் உள்ளன. சோசியல் நெட்வொர்க் அப்ளிகேசன்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டரை இதில் மிக எளிதாக இயக்கலாம்.

குறிப்பாக வீடியோ கேம் உற்பத்தியாளர்களான இஎ, சியங்கா மற்றும் கேம்லாப்ட் இவற்றின் அப்ளிகேசன்கள் உள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி இவற்றின் கேம்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எல்லா அப்ளிகேசன்களையும் ஏற்கனவே அமேசானின் பொறியாளர்கள் பரிசோதனை செய்துள்ளதால் இதன் செயல்திறனைப் பற்றி ஐயம் கொள்ளத் தேவை இல்லை.

இந்த அமேசான் டேப்லட்டில் நெட்பிலிக்ஸ் அப்ளிகேசன் உள்ளதால் இதில், ஆயிரக்கணக்கான வீடியோக்களை ப்ரவுஸ் செய்து பார்க்க முடியும். மேலும் நாம் தவறவிட்ட டிவி நிகழ்ச்சிகளை இந்த நெட்பிலிக்ஸ் மூலம் பார்க்க முடியும். மேலும் இதன் திரையும் மிகத் தெளிவான வீடியோவைத் தருகிறது.

இஎ கேம்ஸ் அல்லது எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் போன்ற பிரபலமான கேம்கள் இந்த டேப்லெட்டில் உள்ளன. உயர்தர க்ராபிக்ஸ் கேம்களை நாம் தடையில்லாமல் இதில் அனுபவிக்கலாம். சியாங்கா மொபைல் சோசியல் கேமிங் தளத்தை வழங்குவதால் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த டேப்லெட் மூலம் நாம் வீடியோ கேம் விளையாட முடியும்.

அமேசானின் இயக்குனர் கூறும்போது கின்டில் பயர் டேப்லட் வீடியோ கேம் பிளேயர்களுக்கான ஒரு சிறந்த சாதனமாக இருக்கும் என்கிறார்.

கேம்லாப்ட் இந்த டேப்லெட்டிற்கு ப்ரீமயமும் அதே நேரத்தில் ஏராளமான இலவச கேம்களை வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறது. அதனால் இந்த டேப்லெட்டை விடியோ கேம் டேப்லெட் என்றும் அழைக்கலாம்.

வீடியோ கேம் தவிர்த்து பார்த்தால் இந்த டேப்லட்டில் வானிலை அறிக்கையைத் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் இருக்கிற 18 மில்லியன் படங்கள், கணிக்கிட முடியாத பாடல்கள் மற்றும் புத்தகங்களை இந்த டேப்லெட் மூலமாகத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆன்லைன் சேமிப்பு வசதிக்காக அமேசான் 5ஜிபி வழங்குகிறது. அதனால் இதில் ஆன்லைன் மூலமாக அதிக தகவல்களை பாடல்களை மற்றும் படங்களை சேமிக்க முடியும்.

அடுத்ததாக அமேசானின் அமேசான் சில்க் என்ற வெப் ப்ரவ்சர் இந்த டேப்லெட்டில் உள்ளதால் இந்த கிண்டில் பயர் டேப்லெட் அதிவேகம் கொண்டதாக இருக்கும்.

மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆயிரக்கணக்கான படங்களையும் மற்றும் டிவி நிகழ்ச்சிகளையும் அக்சஸ் செய்ய அமேசான் ஒரு மாத கால இலவச சப்ஸ்க்ரிப்சனையும் வழங்குகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்