குறந்த விலையில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை வழங்கும் சென்போக்கஸ்

By Super
|
 குறந்த விலையில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை வழங்கும் சென்போக்கஸ்

சென்போக்கஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு மைசென்டேப் 708பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ரூ.6000க்கு கிடைக்கும் இந்த டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த 708பி டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் சிங்கிள் கோர் சிபியு, 1.2 ஜிஹெர்ட்ஸ் மற்றும் மாலி 400 ஜிபியு ஆகியவை இருப்பதால் இந்த டேப்லெட் அசூர வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம். இந்த ரேம் மட்டும் 512எம்பி அளவில் வருகிறது.

இந்த டேப்லெட்டில் இருக்கும் 7.5 பாயிண்ட் கப்பாசிட்டிவ் மல்டி டச் திரை மிகவும் துல்லியமாக இருக்கும். அதோடு இதன் 4ஜிபி சேமிப்பை 32ஜபி அளவிற்கு விரிவுபடுத்த முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட்டில் வைபை மற்றும் 3ஜி டோங்குள் வசதிகளும் உள்ளன.

இந்த டேப்லெட்டில் ஆங்கிரி பேர்ட்ஸ், ப்ரூட் நிஞ்சா, ப்ளான்ட்ஸ் விஎஸ் சாம்பீஸ் மற்றும் டிக்ஸ்னரி போன்ற கேமிங் அப்ளிகேசன்களும் உள்ளன. இந்த டேப்லெட் வீடியோ உரையாடலுக்காக ஒரு 0.3எம்பி முகப்புக் கேமராவையும் வழங்குகிறது.

மேலும் எம்பி3, டபுள்யுஎம்எ, ஒஜிஜி, ப்ளாக், எபிஇ, எஎசி, எசி3 மற்றும் டிஎஸ் போன்ற ஆடியோ பார்மட்டுகளை இந்த டேப்லெட் சப்போர்ட் செய்யும். அதுபோல் எச்264, எச்263, விசி1, எம்பிஇஜி 1,2,3, டிவிக்ஸ் 3,4,5,6, எக்ஸ்விட், டபுள்யுஎம்வி7 மற்றும் 8, விபி6 மற்றும் எவிஎஸ் போன்ற வீடியோ பார்மட்டுகளையும் இந்த டேப்லெட் சப்போர்ட் செய்யும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X