Home
Computer

வசதிகளை அள்ளித் தரும் மலிவு விலை டேப்லெட்!

By Karthikeyan
வசதிகளை அள்ளித் தரும் மலிவு விலை டேப்லெட்!

டெல்லியைச் சேர்ந்த கோ டெக் நிறுவனம் மலிவான விலையில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் பிசியைக் களமிறக்கி இருக்கிறது. பன்டேப் பிட் என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் ரூ.5,999க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த டேப்லெட் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மையம் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த டேப்லெட்டில் உடல் ஆரோக்கிம் சம்பந்தமான ஏராளமான அப்ளிகேசன்கள் உள்ளன.

இந்த பன்டேப் டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் களமிறங்குகிறது. குறிப்பாக இந்த டேப்லெட்டில் இருக்கும் 7 இன்ச் டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி சேமிப்பு ஆகிய வசதிகளுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் சேமிப்பை 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இந்த டேப்லெட்டில் இருக்கும் 0.3எம்பி முகப்புக் கேமரா மூலம் சூப்பரான வீடியோ உரையாடலையும் நடத்த முடியும். இதன் பேட்டரி 4 மணி நேர மூவி ப்ளேபேக்கையும் அதே நேரத்தில் 8 மணி நேர மியூசிக் ப்ளேபேக்கையும் வழங்குகிறது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் வைபை, 3ஜி, யுஎஸ்பி போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கான குறிப்புகளை வழங்கும் கைட் மை ட்ரீட்மென்ட் என்ற ஆரோக்கிய அப்ளிகேசனையும் இந்த டேப்லெட் வழங்குகிறது. இந்த அப்ளேகேசன் உடல் நலமில்லா நேரங்களில் தகுந்த ஆலோசனைகளை வழங்கும்.

மேலும் இந்த டேப்லெட் கல்விக்கான கண்டென்டையும் வைத்திருக்கிறது. அதாவது இதில் இதில் இருக்கும் அட்டெனோ இபுக் ரீடரில் 1500 புத்தகங்களும் மற்றும் 7500 வீடியோக்களும் உள்ளன. குறிப்பாக ஐஐடி ஜேஇஇ மற்றும் எஐஇஇஇ தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு இந்த அப்ளிகேசன் மிக உதவியாக இருக்கும்.

இந்த டேப்லெட்டில் பொழுதுபோக்கு அம்சங்களும் குறைவுபடாமல் இருக்கின்றன. குறிப்பாக 20க்கும் மேற்பட்ட வீடியோ விளையாட்டுகள் மற்றும் பல்வேறு விளையாட்டு அப்ளிகேசன்கள் குறிப்பாக ஆங்கிரி பேர்ட், டிக் டேக் டோ, சோலிடையர், மைன்ஸ்வீப்பர் போன்றவையும் உள்ளன.

அதுபோல் இந்த டேப்லெட்டில் ஹங்கமா ப்ளே ஸ்டோரையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் 3000க்கும் அதிகமான வீடியோக்கள் மற்றும் 6000க்கும் அதிகமான பாடல்களை அனுபவிக்க முடியும். மேலும் இந்த டேப்லெட்டில் இலவசமாக வைபை ஒசோன் ஹாட்ஸ்பாட்டை அக்சஸ் செய்ய முடியும்.

இவ்வாறு ஏராளமான வசதிகளுடன் வரும் இந்த டேப்லெட் மற்ற மலிவு விலை டேப்லெட்டுகளை ஓரம் கட்டிவிடும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X