Home
Computer

ஆயுட்கால உத்தரவாதத்துடன் புதிய வீடியோ கேம் லேப்டாப்!

By Karthikeyan
ஆயுட்கால உத்தரவாதத்துடன் புதிய வீடியோ கேம் லேப்டாப்!

ஒரு காலத்தில் அலுவலக பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட கணினிகள் இப்போது முழுமையான கேமிங் வசதிகளைத் தாங்கிவர ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையி்ல் ஆரிஜின் நிறுவனம் ஒரு புதிய 11 இன்ச் கேமிங் கணினியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த லேப்டாப் கணினிக்கு இஒஎன்-எஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய லேப்டாப் ஆரிஜினின் மிகச் சிறிய லேப்டாப் ஆகும்.

இந்த புதிய கேமிங் லேப்டாப் பல வண்ணங்களில் வருகிறது. மேலும் இது ஒரு கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

இந்த இஒஎன் லேப்டாப் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வருவதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். அதுபோல் மேம்படுத்தப்பட்ட 2ஜிபி என்விடியா க்ராபிக்ஸ் ஜிபியு கொண்டு வருவதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளும் சூப்பராக இருக்கும். இதன் பேட்டரி இந்த லேப்டாப்பிற்கு 6.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

மிகவும் குறைந்த எடையுடன் வரும் இந்த லேப்டாப் முழுமையான இணைப்பு வசதிகளைக் கொண்டு வருகிறது. அதுபோல் ப்ரீ லைப் டைம் சப்போர்ட்டும் இந்த லேப்டாப்பிற்கு உண்டு.

இந்த லேப்டாப் இன்டலின் 3ஜி ப்ராசஸர்களைக் கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் அதிரடியாக இருக்கும். இதில் உள்ள டைரக்ட்எக்ஸ் 11 மூலம் முழுமையான மேம்பட்ட க்ராபிக்ஸ் அனுபவத்தை இந்த லேப்டாப்பில் பெறலாம். மேலும் இதில் உள்ள என்விடியா ஜிஇபோர்ஸ் 650எம் க்ராபிக்ஸ் யுனிட் நவீன கணினி கேம்களை மிக எளிதாக இயங்க வைக்கிறது.

மேலும் இந்த லேப்டாப்பில் டிஎச்எஸ் ட்ரூஸ்டூடியோ ப்ரோ உள்ளதால் இந்த லேப்டாப்பில் க்ரிஸ்டல் க்ளியர் ஆடியோவை அனுபவிக்க முடியும். இதில் உள்ள ப்ளூடூத் 4.0 மூலம் தகவல் பரிமாற்றங்களை மிக எளிதாகச் செய்ய முடியும். அதோடு இதில் எச்டிஎம்ஐ அவுட் உள்ளதால் இந்த லேப்டாப்பை எச்டி டிவியுடன் மிக எளிதாக இணைக்க முடியும்.

இந்த புதிய கேமிங் கணினியின் விலை ரூ.50000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைப்டைம் 24/7 சப்போர்ட் வசதி இந்த லேப்டாப்பிற்கு உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X