இன்டர்நெட் வசதியுடன் விற்பனைக்கு வரும் புதிய இவோடிவி!

சாப்ட்வேர் மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமான அம்கெட் ஒரு புதிய கணினி சாதனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த சாதனம் இவோடிவி என்று அழைக்கப்படுகிறது. இது ரூ.9,995க்கு விற்கப்படுகிறது.
இந்த புதிய சாதனத்தின் மூலம் கணினியில் இணைய தளத்தை இயக்குவது போல் இணையதளத்தை இயக்க முடியும். இந்த புதிய சாதனம் விற்பனையில் சாதனை படைக்கும் என்று அம்கெட் சவால் விடுகிறது.
ஆப்பிள் டிவியைப் போல் இந்த இவோடிவி ஒரு டிஜிட்டல் சாதனம் ஆகும். வைபை மற்றும் ப்ராட் பேண்ட் இணைப்பு மூலம் இந்த சாதனத்தில் வீடியோ பார்க்க முடியும், விளையாட்டுகளை விளையாட முடியும். மற்றும் இணையதளத்தை இயக்க முடியும். மேலும் இந்த சாதனம் மவுஸ் போன்று ஒரு ரிமோட்டுடன் வருகிறது. அதோடு இதில் ஒரு மைக்கும் இருப்பதால் ஸ்கைப் ஆன்லைன் உரையாடல்களையும் இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் அமைந்த இந்த இவோடிவி இந்த மாத இறுதிக்குள் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் விற்பனைக்கு வந்துவிடும். அதேபோல் வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தியாவின் 40 மாநகரங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
இந்த இவோடிவி மூலம் டிவி துறையில் ஒரு புதியதொரு புரட்சியை உலக அளவில் தனது நிறுவனம் படைக்க இருப்பதாக பப்னா கூறுகிறார். குறிப்பாக இணையதள பயன்பாடு என்பது கணினிக்குள் மட்டும் முடிந்துவிடக் கூடாது. அது டிவிகளுக்கும் வரவேண்டும் என்று கூறுகிறார்.
அதே நேரத்தில் கூகுளும் தனது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் ஒரு புதிய கூகுள் டிவியை களமிறக்குகிறது. இந்த கூகுள் டிவியில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். அதே நேரத்தில் இணையதளத்தையும் இயக்க முடியும். அதுபோல் விளையாட்டுகளையும் விளையாட முடியும்.
அம்கெட் தனது இவோடிவியுடன் வயர்லஸ் கீபோர்டையும் தருகிறது. மேலும் இந்த சாதனம் இரண்டு எஆர்எம் ப்ராசஸர்களுடன் வருகிறது. மேலும் இதில் ஆன்ட்ராய்டு அப்ளிககேசன்களை மிக எளிதாக பதிவிறக்கும் செய்யலாம்.


Click it and Unblock the Notifications