அல்ட்ராபுக்குகளுக்கு போட்டியாக ஏஎம்டியின் அல்ட்ராதின் லேப்டாப்!

By Karthikeyan
|
அல்ட்ராபுக்குகளுக்கு போட்டியாக ஏஎம்டியின் அல்ட்ராதின் லேப்டாப்!

மெல்லிய மற்றும் அடக்கமான லேப்டாப்புகள் இப்போது அதிகமாக வர ஆரம்பித்து இருக்கின்றன. சிறிய மற்றும் எடை குறைந்த லேப்டாப்புகளை பயன்படுத்துவதற்கும் மற்றும் வெளியில் எடுத்துச் செல்வதற்கும் மிக எளிதாக இருக்கும்.

இதை உணர்ந்த ஏஎம்டி சூப்பர் கம்பாக்ட் மற்றும் மலிவு விலை லேப்டாப்புகளை இந்த வருடம் களமிறக்க இருக்கிறது. இந்த லேப்டாப்புகளை அல்ட்ராபுக்குகள் என்று அழைப்பதற்கு பதிலாக அல்ட்ராதின்ஸ் என்று எஎம்டி அழைக்கிறது. ஏனெனில் இன்டல் நிறுவனத்தோடு தகராறு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்தப் பெயரை வைத்திருக்கிறது. லாஸ் வேகாஸ் கண்காட்சியில் டிரினிட்டி ப்ராசஸரில் இயங்கும் லேப்டாப்புகளை ஏஎம்டி அறிமுகப்படுத்தியது. அல்ட்ராதின் லேப்டாப்புகளும் இந்த டிரினிட்டி ப்ராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் மிகவும் சிறியதாக வரும் இந்த சூப்பர் கம்பாக்ட் லேப்டாப்புகள் குறைந்த விலையிலும் வருகின்றன. அதாவது இப்போது இன்டல் ப்ராசஸர் கொண்ட அல்டராபுக்குகள் ரூ.40000க்குள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் புதிய ப்ராசஸருடன் கூடிய தனது அல்ட்ராதின் லேப்டாப்புகளை ரூ.30000க்கு விற்பனை செய்ய எஎம்டி முடிவெடுத்திருக்கிறது.

அதன் மூலம் கணிசமான அளவில் வாடிக்கையாளர்களைக் கவரலாம் என நினைக்கிறது. அதே நேரத்தில் தனது புதுமுக லேப்டாப்புகளின் விலையில் ரூ.5000ஐ குறைக்க இன்டல் முடிவெடுத்திருக்கிறது என்று வதந்திகளும் வருகின்றன. அவ்வாறு நடந்தால் அல்ட்ராபுக் மற்றும் அல்ட்ராதின்களுக்கிடையே உள்ள முக்கிய அம்சங்களை கெட்ஜெட் உலகேமே திரும்பிப் பார்க்கும் என்பது உண்மை.

இந்த அல்ட்ராதின் டிவைஸ்களுக்கு உயிர் கொடுக்கப் போகும் டிரினிட்டி சிப், சிபியு மற்றும் க்ராபிகஸ் ப்ராசஸிங் யுனிட் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி ஒரே அமைப்பில் கொண்டிருக்கிறது. இதன் சிபியு புல்டோசர் கோர் டைப்பைச் சேர்ந்தது. தற்போது இதன் பெயர் பைல்ட்ரைவர் ஆகும். இதன் ஜிபியுவை எஎம்டி ரேடியோன் எச்டி7970ல் பொருத்திய போது மிகவும் பிரபலமானது.

இப்போது எஎம்டி 2 வரிசையான ப்ராசஸர்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது 17 வாட்ஸ் மின்திறன் கொண்ட சிப்புகளை அல்ட்ராதின்களுக்கும் 35 வாட்ஸ் மின்திறன் கொண்ட சிப்புகளை ஸ்டேன்டர்டு லேப்டாப்புகளுக்கும் வழங்க இருக்கிறது.

இந்த குறைவான சக்தி கொண்ட சிப்புகள் எஎம்டியின் லியனோ ஓ வரிசை சிப்பு போன்ற இரண்டு மடங்கு சக்தியை வழங்கும். இதன் புதிய ப்ராசஸர்களின் வேகம் 25 % அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அதன் ஜிபியுவின் வேகம் 50% அதிகமாக இருக்கும்.

இந்த சிப்புகள் இன்னும் தயாரிப்பு நிலையில் இருக்கின்றன. மேலும் இந்த சிப்புகள் அறிமுகம் ஆகும் முன் அவற்றில் ஒரு சில மாற்றங்களும் ஏற்படலாம். இவை எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X