டூவல் கோர் கம்ப்யூட்டைரை அறிமுகப்படுத்தும் ஏஎம்டி

Posted By: Staff

டூவல் கோர் கம்ப்யூட்டைரை அறிமுகப்படுத்தும் ஏஎம்டி
எஎம்டி நிறுவனம் விரைவில் டூவல் கோர் கணினிகளை அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வந்துவிட்டது. எல்ஐஎஎன்ஒ எபியுஎஸ்கள் ஏ4-3400 மற்றும் ஏ4-3300 என்ற பெயர்களில் இந்த புதிய கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இரண்டு கம்ப்யூட்டர்களும் தொடக்க நிலையில் உள்ளதால் இதில் க்ராபிக்ஸ் செயல்பாடு மிக குறைவாக இருக்கும். ஆனால் இதில் எச்டி ரேடியோன் 6410டி உள்ளது. ஆனால் இது 65 வாட்ஸ் டிடிபி கொண்டு குறைந்த விலையில் வருகிறது.

இதன் வசதிகளைப் பார்த்தால் இரண்டு கணினிகளுமே ரேடியோன் எச்டி ப்ராசஸர் கொண்டு 160 ஸ்ட்ரீம்ஸ் கொண்டு 65வாட்ஸ் டிடிபி ரேட்டிங்குடன் 1எம்பி எல்2 கேச் பெற்று டிடிஆர்3-1600 மெமரியைக் கொண்டுள்ளது.

இரண்டுமே டூவல் க்ராபிக்ஸ் வசதி கொண்டிருந்தாலும் இதன் எஎம்டி டர்போ கோர் சப்போர்ட் குறைவாக உள்ளது. எ4-3400வின் சிபியு வேகத்தைப் பார்த்தால் அது 2.7ஜி ஹெர்ட்ஸ் ஆகும். அது போல் எ4-3300ன் சிபியு வேகம் 2.5ஜி ஹர்ட்ஸ் மற்றும் 443 மெகா ஹர்ட்ஸ் ஜிபியு ஆகும்.

இதன் ஆர்கிடெக்சரைப் பார்த்தால் இது ஒரு கே-10 மைக்ரோ ஆர்கிடெக்சருடன் லினக்ஸ் ப்ளாட்பார்மை கொண்டுள்ளது. மேலும் இதன் டூவல் கோர் 64பிட் டேட்டாவைக் கொண்டுள்ளது. எ4-3400வின் கேச் அளவைப் பார்த்தால் அது 2 X 64 கிலோ பைட்ஸ் 2 வழியுடன் அசோஸியேட்டிவ் டேட்டா கேச்சஸ் கொண்டுள்ளது.

எ4-3300ன் கேச் அளவைப் பார்த்தால் அது 2 x 512 கிலோ பைட்ஸ் 16 வழி கேச்சஸ் கொண்டுள்ளது. மேலும் இது எம்எம்எக்ஸ், 3டி நவ், எஸ்எஸ்இ, எஸ்எஸ்இ2, எஸ்எஸ்இ3, எஸ்எஸ்இ4எ, எஎம்டி 64 தொழில் நுட்பம், எஎம்டி-வி தொழில்நுட்பம் மற்றும் ஆண்டிவைரஸ் பாதுகாப்பு போன்ற வசதிகளை கொண்டுள்ளன.

இதன் மின்திறன் அளப்பரியது. இவை மிகுந்த மின் சேமிப்பைக் கொடுக்கும். அதாவது இது டூவல் சானல் டிடிஆர்3 மெமரி கன்ட்ரோலருடன் பிசிஐ எக்ஸ்ப்ரஸ் 2.0 மற்றும் எச்டி க்ராபிக்ஸ் கண்ட்ரோலரும் கொண்டுள்ளது.

இதன் எஎம்டி எடி3400ஜேஸட்22ஜிஎக்ஸ் கொண்டு இன்டக்ரேட்டட் எச்டி 6410டி ஜிபியு மற்றும் 600 மெகா ஹர்ஸ் 160 யுனிட்டைக் கொண்டிருக்கிறது.

இவற்றின் விலை மிகக் குறைவே. எ4-3400 அமெரிக்காவில் 75 டாலருக்கும் அதாவது இந்தியாவில் ரூ.3478க்கும் எ4-3300 அமெரிக்காவில் 70 டாலருக்கும் அதாவது இந்தியாவில் ரூ.3246க்கும் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்