கிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகள்

Posted By: Karthikeyan
    X

    கிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகள்

    அமேசானின் கின்டில் பயர் டேப்லெட் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த கிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகளைக் களமிறக்க இருக்கிறது அமேசான். அதற்கான அறிவிப்பை கலிபோர்னியாவில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வில் அமேசான் வெளியிட்டது.

    கின்டில் பயர் எச்டி என்ற டேப்லெட் 7 இன்ச் அல்லது 8.9 இன்ச் திரை அளவுடன் வரும். அதோடு இந்த டேப்லெட் இங்கிலாந்தில் 159 பவுண்டுக்கு விற்கப்படும். மேலும் கிண்டில் பயர் வரிசையி்ல் சற்று குறைந்த வசதிகளுடன் வரும் இன்னுமொரு புதிய டேப்லெட் 129 பவுண்டுகளுக்கு விற்கப்படும். இந்த இரண்டு டேப்லெட்டுகளும் வரும் அக்டோபர் 25 அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    8.9 இன்ச் கின்டில் பயர் எச்டி டேப்லெட் வரும் நவம்பரில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும். இந்த 3 டேப்லெட்டுகளுமே ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்  மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளுடன் வரும் என்று அமேசானின் தலைமை மேலாளர் ஜெப் பிசோஸ் தெரிவித்திருக்கிறார். இந்த டேப்லெட்டுகளை எச்டிஎம்ஐ போர்ட் மூலம் டிவிகளில் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

    அதோடு இந்த டேப்லெட்டுகள் 2 வைபை அன்டனாக்கள் மற்றும் மிமோ ரேடியோ வேவ் தொழில் நுட்பம் ஆகியவற்றுடன் வருகின்றன. அதனால் இதி்ல் இணையதளத்தில் மிக விரைவாக வேலை செய்யலாம்.

    அமேசானின் இந்த புதிய டேப்லெட்டுகள், கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினி போன்றவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more