Home
Computer

சொந்த பிராண்டில் புதிய டேப்லெட்களை அறிமுகப்படுத்தும் அமேசான்

By Super
சொந்த பிராண்டில் புதிய டேப்லெட்களை அறிமுகப்படுத்தும் அமேசான்
மின்னணு சாதன தயாரிப்பில் புகழ்பெற்ற அமேசான் நிறுவனம், சொந்த பிராண்டில் புதிய டேப்லெட்களை தயாரிக்க உள்ளது. அமேசான் கிண்டில் டேப்லெட் என்ற பிராண்டில் இந்த புதிய டேப்லெட்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் உருவாக்கியுள்ள சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இந்த புதிய அமேசான் கின்டில் டேப்லட்கள் சந்தைக்கு வருகிறது.

இந்த அமேசான் டேப்லட் டச் ஸ்கிரீன் மற்றும் மல்டி டச் திரை வசதி கொண்டதாக தயாரிக்கப்பட உள்ளது.அது மட்டும் அல்லாத இன்னும் நிறைய வசதிகளையும் வழங்க உள்ளது.

அமேசான் டேப்லட் மாடல் ஆன்ராய்டு டேப்லட்டின் அடிப்படையிலும், மற்றும் அதே தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டிருப்பதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய யூஐ முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இதனுடைய மானிட்டர் காம் காம்ப்பிலிமென்ட் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் அமேசான் அப்ளிகேஷன்ஸ் லோடட் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லட் நிச்சயம் தரமான ஆப்பிரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கின்டில் ரீடர்,இன்ஸ்டன்ட் வீடியோ பிளேயர்,அமேசான் கிளவ்ட் பிளேயர்,போன்றவற்றையும் இதில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

அந்த அளவு இதில் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இந்த டேப்லட்டின் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட களவுட் சர்வீசஸ் அப்ளிக்கேஷன்ஸைக் கொண்டது என்று ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதே உண்மை. இதில் இருவிரல் மல்டி டச் தொடுதிரை வசதி உள்ளது.. இதனுடைய டிவைஸ் சிங்கில் சிப் கொண்டு லோடட் செய்யப்பட்டுள்ளது.

6ஜிபி வரை இதில் இன்டர்னல் மெமரி வசதி உள்ளது. 6ஜிபி வரை இதன் மெமரியை மைக்ரோஎஸ்டி ஸ்லாட் மூலம் விரிவுபடுத்திக் கொள்ளமுடியும். இந்த டேப்லட்டில் வைஃபை வசதியும் உள்ளது. இதில் அற்புதமான நெட் வசதியும் பெற முடியும்.

இந்த டேப்லட்டின் பின்புறத்தில் ரப்பர் கிரிப் வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமேசான் மாடல்,ரிம் பிளாக்பெர்ரி மாடலை நினைவூட்டும் வகையில் உள்ளது.இதில் கேமரா வசதி இல்லாதது குறையாக தெரிகிறது. இதில் இ-புக், லைவ் மியூசிக், ஆன்லைன் டிவி போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டேப்லெட் அமெரிக்காவின் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட டேப்லெட் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X