Amazon Prime Day 2021: லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் வலைத்தளத்தில் Amazon Prime Day 2021 எனும் தலைப்பில் பல்வேறு சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லேப்டாப் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இந்த சலுகைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் விலைகுறைக்கப்பட்ட லேப்டாப் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.
அசுஸ் TUF F15 லேப்டாப்
இந்த சிறப்பு விற்பனையில் அசுஸ் TUF F15 லேப்டாப் மாடலை குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு ரூ.40,000 வரை விலைகுறைக்கபபட்டுள்ளது. எனவே இப்போது அசுஸ் TUF F15 லேப்டாப் மாடலை ரூ.76,990-விலையில் வாங்க முடியும். அதேபோல் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, GeForce GTX 16-Series GPU உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.
டெல் 15 (2021) ஐ5
டெல் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டெல் 15 (2021) ஐ5 லேப்டாப் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்திற்கு ரூ.14,359-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. எனவே
இந்த சாதனத்தை ரூ.66,990-விலையில் வாங்க முடியும். இந்த சாதனம் 15.6-இன்ச் எப்எச்டி Anti-glare LED Backlight Narrow Border WVA டிஸ்பிளே மற்றும் தனித்துவமான மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 லேப்டாப்
அமேசான் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 லேப்டாப் மாடலை ரூ.26,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 600, குரோம் ஓஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 லேப்டாப் மாடல்.
லெனோவோ ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப்
அமேசான் வலைத்தளத்தில் இன்று நடைபெறும் சிறப்பு விற்பனையில் லெனோவோ ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.54,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான டிஸ்பிளே வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. லெனோவோ இதுதவிர 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 250 நிட்ஸ் ப்ரைட்னஸ்,என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1650 4 ஜிபி ஜி.டி.டி.ஆர் 6 கிராபிக்ஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.
மி நோட்புக் 14 Horizon எடிஷன்
சியோமி நிறுவனத்தின் அசத்தலான மி நோட்புக் 14 Horizon எடிஷன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமேசான் வலைத்தளத்தில் இப்போது இந்த சாதனத்தை ரூ.54,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக10 வது ஜெனரல் இன்டெல் கோர் i5-10210U பிராசஸர், Windows 10 Home இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான மி நோட்புக் 14 Horizon எடிஷன் லேப்டாப்.
ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப்
ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் மாடலுக்கு ரூ.13,182 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது அமேசான் வலைத்தளத்தில் இந்த சாதனத்தை ரூ.56,990-விலையில் வாங்க முடியும். மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications