அமேசானின் புதிய கின்டில் பயர் டேப்லெட்டுகள்!

அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுகள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. அந்த வரிசையில் தற்போது அமேசான மேலும் 6 புதிய கின்டில் பயர் டேப்லெட்டைகளைக் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இந்த புதிய டேப்லெட்டுகளைப் பற்றிய விரிவான செய்திகள் இன்னும் வரவில்லை. எனினும் இந்த புதிய டேப்லெட்டுகள் ஆப்பிளின் ஐபேட் மற்றும் கூகுளின் வரவிருக்கும் புதிய நெக்சுஸ் 7 டேப்லெட்டுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 6 டேப்லெட்டுகளும் பல சைஸ்களில் வரும் என்று தெரிகிறது. எனவே வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சைஸ்களைத் தேர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுகள் மூலம் உலகச் சந்தையில் அமேசான ஒரு நிலையான இடத்தைப் பெற்று இருக்கிறது.
இந்த புதிய டேப்லெட்டுகள் மூலம் அமேசானுக்கு நற்பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கூகுள் மற்றும் ஆப்பிளோடு கடுமையாக அமேசான மல்லுக்கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய டேப்லெட்டுகளில் மிகவும் மேம்பட்ட இயங்கு தளங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இவை எப்போடு விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை என்றாலும் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பலாம். அதோடு இதன் விலையும் மலிவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications