ஐபேடுக்கு போட்டியாக வரும் அமேசான் டேப்லெட்!

இப்போது இருக்கும் சூழலில் ஆப்பிளின் ஐபேடுக்கு பேட்டியாக இருக்கும் ஒரே டேப்லெட் அமேசானின் கின்டில் பயராகத்தான் இருக்கும் என்று சொல்லலாம். இந்த 7 இன்ச் கிண்டில் பயர் டேப்லெட்டின் விலை வரும் 3வது காலாண்டில் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட இருக்கிறது. இது அமேசானின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
டிஜிடைம்சின் கருத்துப்படி அமேசான் வரும் காலாண்டில் புதிய இரீடர்களையும் அதுபோல் ஒரு புதிய 7 இன்ச் டேப்லெட்டையும் களமிறக்க இருக்கிறது. டிஜிடைம்சின் இந்தக் கருந்து உண்மையாக இருந்தால் வரும் ஜூலையில் அமேசான் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்கிவிடும் என்று நம்பலாம்.
மேலும் இந்த புதிய டேப்லெட் கிண்டில் பயர் டேப்லெட்டுக்கு இணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் இதன் விலையும் மிகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 1280x800 ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டேப்லெட் 199 அமெரிக்க டாலர்களுக்கும், அதே நேரத்தில் 1024x600 ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டேப்லெட் 149 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படும் என்று தெரிகிறது.
ஐபேடை சாமாளிக்கத் துடிக்கும் அமேசானின் இந்த புதிய முயற்சி வெற்றி பெறுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications