கிண்டில் பயரை வீழ்த்துமா நுக் டேப்லெட்?

By Super
|

கிண்டில் பயரை வீழ்த்துமா நுக் டேப்லெட்?
ஆப்பிளின் ஐபேட் டேப்லட்டுகளை வீழ்த்தும் அளவிற்கு ஒரு சில டேப்லெட்டுகள்தான் இது வரையில் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று அமேசானின் கின்டில் பயர் டேப்லெட் ஆகும். இந்த கின்டில் பயர் குறைந்த விலையில் வந்தாலும் இந்த டேப்லட்டுக்கு பலத்த போட்டியாளர்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான ஒன்று பேர்னஸ் நோபுள் நுக் டேப்லெட் ஆகும். இந்த கின்டில் பயர் மற்றும் நோபுள் நுக் ஆகிய 2 டேப்லெட்டுகளும் மிக ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

அமேசான் கின்டில் பயர் டேப்லெட் கூகுளின் ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதன் மொத்த பரப்பு 190 x 120 x 11.4 மிமீ ஆகும். இதன் மொத்த எடை 413 கிராம் மட்டுமே. இதன் டிஸ்ப்ளேயைப் பார்க்கும் போது அது 7 இன்ச் அளவில் எல்சிடி கெப்பாசிட்டிவ் மல்டி தொடுதிரை கொண்டு அதே நேரத்தில் 1024 x 600 பிக்சல் ரிசலூசனையும் வழங்குகிறது. மேலும் இந்த திரை கீறல் தடுப்பு வசதியும் கொண்டிருக்கிறது.

இந்த கிண்டில் பயர் டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் எ9 ஒஎம்எ4 ப்ராசஸர் கொண்டு அதே நேரத்தில் 512 எம்பி ரேமையும் கொண்டிருக்கிறது. இதன் இன்டர்னல் சேமிப்பு வசதி 8ஜிபி ஆகும். மேலும் இது ஒரு நல்ல வெப் ப்ராவுசர் மற்றும் எச்டிஎம்எல் சப்போர்ட் ஆகியைவ கொண்டு வருகிறது. ஒலி அமைப்பிற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் கொண்டிருக்கிறது. இணைப்பு வசதிக்காக வைபை இணைப்பு இந்த டேப்லெட்டில் உண்டு. மேலும் இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கையும் இந்த டேப்லெட்டில் நாம் அனுபவிக்கலாம்.

அடுத்ததாக நுக் டேப்லெட்டின் வசதிகளைப் பார்த்தால் இது கூகுளின் ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 205 x 127 x 12.2 மிமீ ஆகும். இதன் எடை 400 கிராம் ஆகும். இதன் திரையைப் பார்த்தால் அது 7 இன்ச் எல்சிடி கெப்பாசிட்டிவ் மல்டி தொடு திரை வசதி கொண்டு 1024 x 600 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது.

மேலும் இந்த நுக் டேப்லெட் 1ஜிபி ரேமுடன் 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் டிஐ 4430 ப்ராசரஸர் கொண்டு வருகிறது. க்ராபிகஸ் வேலைகளுக்காக இந்த டேப்லெட் பிடபுள்யுஇஆர்விஆர் எஸ்ஜிஎக்ஸ்540 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யுனிட் கொண்டிருக்கிறது.

ஸ்டாக்டு ப்ளாஷ் 16ஜிபி இஎம்எம்சி ரோமும் இந்த டேப்லெட்டில் உண்டு. இதன் சேமிப்பு வசதி 11ஜிபி ஆகும். மேலும் மைக்ரோ எஸ்டிஎச்சி மெமரி கார்டுகல் மூலம் இதன் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதுபோல் அக்ஸ்லரோமீட்டர் வைஃபை இணைப்பு ஆகிய இணைப்பு வசதிகளையும் இந்த டேப்லெட் தாங்கி வருகிறது. மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் இந்த டேப்லெட்டில் வருகிறது.

மேற்சொன்ன சிறப்பம்சங்களை இந்த இரண்டு டேப்லெட்டுகளும் கொண்டிருந்தாலும் டிசைனைப் பார்த்தால் நுக் டேப்லெட் பரிசைத் தட்டிச் செல்லும் விதத்தில் வருகிறது. ஆனால் அதற்காக கிண்டில் பயர் டேப்லெட் குறைவாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. அதுபோல் இரண்டுமே ஐபிஎஸ் 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருந்தாலும் நுக் டேப்லெட் விவிடிவியுவ் டிஸ்ப்ளே கொண்டிருப்பதால் கிண்டில் பயரின் டிஸ்ப்ளேயைவிட மிகத் தெளிவாக இருக்கும்.

ஒலி கட்டுப்பாட்டைப் பார்க்கும் போது நுக்புக் டேப்லெட் பிசிக்கல் ஒலி கட்டுப்பாட்டையும் அதே நேரத்தில் கிண்டில் பயர் வெர்ச்சுவல் சாப்ட்வேர் அடிப்படையிலான ஒலி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் சேமிப்பு வசதியைப் பொருத்தவரை நுக்புக் மைக்ரோ எஸ்டிஎச்சி கார்டுகள் மூலம் 32ஜிபி வரை விரிவு செய்யக்கூடிய வசதி கொண்ட 11ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. ஆனால் கிண்டில் பயர் விரிவுபடுத்த முடியாத 8ஜிபி சேமிப்பு வசதியை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளையும் மைக்ரோ யுஎஸ்பி 2.0 மூஸம் சார்ஜ் செய்ய முடியும். நுக்புக் கிண்டில் பயரை விட மென்மையான தொடு வசதியைக் கொண்டுள்ளது. கிண்டில் பயர் அமேசான் அப்ளிகேசன்களுக்காக இலவச கிளவுட் சேமிப்பை வழங்குகிறது.

இந்த 2 டேப்லெட்டுகளின் விலையைப் பார்த்தால் அது ரூ.13000லிருந்து ரூ.15000 வரை இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X