அமேசான் வழங்கும் புதிய டேப்லெட்!

அமேசான்.காம் இன்க் மிக விரைவில் தனது கின்டில் வரிசையில் புதிய இ-ரீடர் மற்றும் புதிய லேப்டாப்பை களமிறக்க இருக்கிறது. அதோடு முகப்பு விளக்குடன் கூடிய மோனோக்ரோம் இ-ரீடரையும் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய இ-ரீடர் வரும் ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் கூறுக்கின்றன. ஆனால் இந்த தகவலை அமேசான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அமேசானின் கின்டில் இ-ரீடர் மிகவும் பிரபலமானது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதை வாங்கும் போது தனியாக ஒரு விளக்கையும் வாங்க வேண்டும். இந்த விளக்கை இந்த இ-ரீடரில் பொருத்தி இருளான இடங்களில் இந்த இ-ரீடரை வாசிக்கலாம்.
ஆனால் வர இருக்கும் இந்த புதிய இ-ரீடரில் இந்த பிரச்சினை இருக்காது. ஏனெனில் புதிய இ-ரீடரில் முகப்பு விளக்கும் சேர்ந்த வரும். அதனால் இந்த முகப்பு விளக்கு மூலம் இரளான இடங்களில் புதிய இ-ரீடரை வாசிக்க முடியும். ஆனால் இந்த முகப்பு விளக்கு கணிசமான மின்சாரத்தை உறிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதன் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
மேலும் அமேசான் ஒரு புதிய டேப்லெட்டையும் இந்த கோடை விடுமுறையில் களமிறக்க திட்டமிட்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன. புதிய கிண்டில் பயர் டேப்லெட் 8.9 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதனால் ஆப்பிள் ஐபேட் அளவிற்கு இருக்கும் என்று தெரிகிறது.
அதோடு அமேசான் ஒரு புதிய கிண்டில் இ-ரீடரையும் களமிறக்க இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய இ-ரீடர் 3ஜி வசதி மற்றும் வைபை வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்சொன்ன இந்த தகவல்கள் அனைத்தையும் இன்னும் அமேசான் உறுதிப்படுத்தவில்லை. எனினும் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications