ஆல்ஃபபெட்டிக்ஸ் நிறுவனத்தின் புதிய டேப்லட்கள்!

டேப் குரு என்ற நிறுவனத்தின் மூலம் கல்வி சம்மந்தமான தகவல்களை இந்த டேப்லட்டில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளதாக ஒரு முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆல்ஃபா இடியூ-I, இடியூ-II ஆகிய இந்த இரண்டு
டேப்லட்களும் 7 இஞ்ச் திரை வசதியினை கொண்டது.
இந்த டேப்லட்கள் 7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் என்று 2 விதமான திரையில் கிடைக்கும். இதன் இன்னும் முக்கிய தொழில் நுட்பம், இந்த டேப்லட்கள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இதனால் இந்த டேப்லட்டில் நிச்சயம் நிறைய ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
அதோடு இந்த டேப்லட்களில் ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளியின் பாடங்களையும் பெறலாம். ஆனால் இந்த டேப்லட்களில் இன்னும் சில முக்கிய வசதிகள் மேம்படுத்தப்பட்ட வகையில் கொடுக்க வேண்டி இருக்கிறது.
இதில் இன்டர்நெட் வசதியை வேகமாக பெறும் வகையில் சில மாற்றங்கள் செய்த பின்பு, அனைத்து வகையிலும் இந்த டேப்லட் சிறப்பாக செயல்படும் என்று ஆல்ஃபபெட்டிக்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி பங்கஜ் குருல்கர் தெரிவித்துள்ளார்.
ஆல்ஃபா இடியூ-I டேப்லட்டினை ரூ. 9,999 விலையிலும், ஆல்ஃபா இடியூ-II டேப்லட்டினை ரூ. 14,999 விலையிலும் பெறலாம்.


Click it and Unblock the Notifications