Home
Computer

தோஷிபாவின் புதிய ஆல் இன் ஆல் கம்ப்யூட்டர்கள்!

By Karthikeyan
தோஷிபாவின் புதிய ஆல் இன் ஆல் கம்ப்யூட்டர்கள்!

தோஷிபா நிறுவனம் தனது அடுத்த படைப்பாக ஆல் இன் ஒன் ஐவிபிரிட்ஜ் டெஸ்க்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய டெஸ்க்டாப்புகளுக்கு தோஷிபா எல்எக்ஸ்835 மற்றும் தோஷிபா எல்எக்ஸ்815 என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த டெஸ்க்டாப்புகள் பல்திறன் கொண்ட கணினிகளாகும்.

இந்த டெஸ்க்டாப்பில் முழுமையான் எச்டி பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. பார்ப்பதற்கே இந்த டெஸ்க்டாப் மிரட்டலாக இருக்கும். இந்த டெஸ்க்டாப் வயர்லஸ் மவுஸ் மற்றும் வயர்லஸ் கீபோர்டு ஆகியவை கொண்டு வருவதால் இதை எந்த இடத்திலிருந்தும் இயக்க முடியும்.

இந்த டெஸ்க்டாப்புகள் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்த டெஸ்க்டாப் ஐவி பிரிட்ஜ் இன்டல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் இயங்கு திறனும் வேகமும் அமர்க்களமாக இருக்கும். இதன் 1920 x 1080 பிக்சல் கொண்ட கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகத் துல்லிமாக இருக்கும்.

மேலும் இந்த டெஸ்க்டாப்புகள் 16ஜிபி ரேமையும் 3டிபி ஹார்ட் ட்ரைவையும் கொண்டிருக்கின்றன. அதோடு இந்த டெஸ்க்டாப்புகளில் எச்டிஎம்ஐ வசதி, செக்யூரிட்டி லாக் ஸ்லாட், இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள், 4 யுஎஸ்பி 2.0 சாக்கெட்டுகள், ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சேனல்கள், பிசி ஹெல்த் மானிட்டர், வைபை, டபுள்யுஇபி, டபுள்யுபிஎ, டபுள்யுபிஎ2 வைபை என்கிரிப்சன், ஆப்டிக்கல் ரைட் சப்போர்ட் மற்றும் ப்ளூரே, டிவிடி மற்றும் சிடி வசதி போன்ற ஏராளமான தொழில் நுட்பங்களை அனுபவிக்க முடியும்.

இந்த இரண்டு டெஸ்க்டாப்புகளில் ஒரே ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது எல்எக்ஸ் 835 டெஸ்க்டாப் 23 இன்ச் டிஸ்ப்ளேயையும், எல்எக்ஸ்815 டெஸ்க்டாப் 21 இன்ச் டிஸ்ப்ளேயையும் கொண்டிருக்கின்றன. மேலும் இவற்றில் 3ஜி ப்ராசஸர்கள் உள்ளதால் இதன் இயக்கம் அதிவேகத்துடன் இருக்கும்.

மேலும் இந்த டெஸ்கடாப்புகளி்ல் ஆடியோ, வீடியோ மற்றும் கேமிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் இந்த டெஸ்க்டாப்புகளில் செட் அப் பாகஸ், டிவிஆர், டிவி டியூனர் மற்றும் ஐஆர் ப்ளாஸ்டர் போன்றவற்றையும் இணைக்க முடியும்.

இந்த 2 டெஸ்க்டாப்புகளும் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. எல்எக்ஸ் 815ன் விலை ரூ.32000 ஆகும். எல்எக்ஸ் 835ன் விலை ரூ.44000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X