ஆப்பிள் ஐபேடுக்கு போட்டியாக வரும் அலிபாபா டேப்லெட்

Posted By: Staff

ஆப்பிள் ஐபேடுக்கு போட்டியாக வரும் அலிபாபா டேப்லெட்
சீன கணினி சந்தையில் அலிபாபா நிறுவனம் புதிய டேப்லட்டை களமிறக்குகிறது. சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனம் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய டேப்லட் ஆலியுன் இயங்குதளத்தில் இயங்கும் என்று இதன் மேலதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆலியுன் இயங்குதளம் கே-டச் டபுள்யு700 என்ற போன் மூலமாக ஏற்கனவே சீன வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. இந்த ஆலியுன் இயங்குதளம் லினக்ஸ் சாப்ட்வேரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை டியான்யு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த புதிய ஆலியுன் இயங்கு தளம் ஆங்கில மொழியிலும் வந்துவிட்டது. எனவே, அலிபாபாவின் இந்த புதிய டேப்லட் ஆப்பிளின் ஐபேடுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு இது ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் பெயர் யான்பேட் என்று இருக்கலாம்.

ஆனால் பெயர் இன்னும் உறுதியாகவில்லை. அலிபாபா ஆப்பிளின் ஐபேடோடு போட்டி போட வேண்டும் என்றே இந்த புதிய ஐபேடை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இது தனிப்பட்ட சிறந்த அம்சங்களைக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஏராளமான குறிப்பாக எஸ்எம்எஸ் போன்ற சேவைகள் இணைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதை வாங்குவோர் ஏராளமான சலுகைகளையும் அனுபவிக்க முடியும்.

சீனாவின் ஸ்டீவ் ஜாப்ஸ் என்று கருதப்படும் அலிபாபவின் சிஇஓவான ஜாக் மா கூறும்போது," இந்த புதிய டேப்லெட் உலகத்தின் அத்தனை சாதனங்களோடும் போட்டி போடக்கூடிய அளவிற்கு சகல அம்சங்களையும் வைத்திருக்கிறது என்று கூறுகிறார். இ

சீன சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆப்பிளின் தயாரிப்புகள் சீன சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் சீனா ஆப்பிளின் 2வது மிகப் பெரிய சந்தையாகும். தற்போதுதான் ஆப்பிள் சீனாவில் ஷாங்காய் நகரில் புதிய ஸ்டோரை திறந்து வைத்தது.

எனவே, அலிபாபா நிறுவனத்தின் திட்டங்கள் விரைவில் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதுபோல் அலிபாபா போட்டிக்காக அல்லாமல் தரம் வாய்ந்த சாதனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot