ரூ.25,000ல் நிறைவான வசதிகளுடன் புதிய எச்பி லேப்டாப்!

By Super
|

ரூ.25,000ல் நிறைவான வசதிகளுடன் புதிய எச்பி லேப்டாப்!
வணிகர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்க்கையில் லேப்டாப் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மேலும் இந்த லேப்டாப் மிக அழகாக குறைவான எடையிலும் குறைவான விலையிலும் வந்தால் அதை வாங்க மக்கள் தயாராக இருக்கின்றனர். தற்போது அப்படிப்பட்ட லேப்டாப்பை எச்பி நிறுவனம் களமிறக்க இருக்கிறது. ஆம், எச்பி ஜி62-340யுஎஸ் என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது.

எச்பியின் இந்த புதிய லேப்டாப் ஜி62 வரிசையில் வருகிறது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் அளவுடன் உயர் டெபினிசன் எல்இடி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 1366 x 768 பிக்சல் ஆகும். இது ஏஎம்டியின் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் அத்லன் II டூவல் கோர் பிராசஸரை கொண்டிருக்கும்.

மேலும் இந்த லேப்டாப்பில் 320ஜிபி ஹார்டு டிஸ்க் உள்ளது. இதன் ரேம் 3ஜிபி எஸ்டிரேம் ஆகும். அதுபோல் 720பி எச்டி வீடியோ ப்ளேபேக்கையும் இந்த லேப்டாப் சப்போர்ட் செய்யும். கிராபி்க்ஸ் வசதிக்காக இது இன்டக்ரேட்டர் எடிஐ ரேடியோன் எச்டி 4250 க்ராபிக்ஸ் அக்ஸிலரேட்டர் யூனிட்டைக் கொண்டுள்ளது.

எச்பி ஜி62-340யுஎஸ் ஒரு இன்டக்ரேட்டட் வெப்காம் மற்றும் சிறந்த மைக்ரோ போனையும் கொண்டிருக்கிறது. மேலும் லைட்ஸ்க்ரைப் தொழில் நுட்பம் இதில் உள்ளதால் இதன் டிவிடி பர்னர் மிக சிறந்த முறையில் வேலை செய்யும்.

மேலும் இது இன்பி்ல்டாக 10/100 பேஸ் டி எர்த்நெட் லேனைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு வசதிக்காக இந்த லேப்டாப் வைபை 802.11 பி/ஜ/என் டபிள்யூலேனைக் கொண்டுள்ளது. அதுபோல் அதிரடி இசை வழங்கும் அல்டெக்-லேன்சிங் ஸ்பீக்கர்களையும் இந்த புதிய லேப்டாப் வழங்குகிறது.

எச்பி ஜி62-340யுஎஸ்ஸில் உள்ள 5 இன் 1 கார்டு ரீடர் இந்த லேப்டாப்புக்கு மகுடம் சேர்க்கும் ஒன்றாகும். இந்த லேப்டாப் எச்டிஎம்ஐ போர்ட், ஒரு ஹெட்போன் அவுட், ஒரு மைக்ரோபோன் போர் மற்றும் 3 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 15 பின் விஜிஎ போர் மற்றும் ஆர்ஜே 45 லேன் போர்ட் ஆகியவை கவரும் விதத்தில் இருக்கின்றன.

எச்பி ஜி62-340யுஎஸ்ஸின் கீபோர்டு மிக அழகாக உள்ளது. மேலும் இது 64பிட் ப்ரீமியம் விண்டோஸ் 7 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பின் எடை 5.51 எல்பி ஆகும். அதுபோல் இதன் பேட்டரி 4 மணி நேர இயக்க பேக்கப்பைக் கொண்டுள்ளது. விலையைப் பார்த்தால் இந்த எச்பி ஜி62-340யுஎஸ் ரூ.25,000க்குள் இருக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X