அப்படி போடு.. சரியான நேரத்தில் கம்மி விலையில் புதிய லேப்டாப் அறிமுகம் செய்த Infinix.!
பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் (Infinix INBook X2 Slim) லேப்டாப் மாடலை தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பெயருக்கு தகுந்தபடி, குறைந்த எடையுடன் தரமான அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த புதிய லேப்டாப் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை கொண்டு இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் வெளிவந்துள்ளது. மேலும் 100% sRGB, 72% NTSC, 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய இன்பினிக்ஸ் லேப்டாப்.
இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் மாடலில் 3ஜிகாஹெர்ட்ஸ் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ3-115ஜி4 பிராசஸர் உடன் இன்டெல் யுஎஸ்டி கிராபிக்ஸ் ஆதரவு உள்ளது. இதுதவிர 2.5ஜிகாஹெர்ட்ஸ் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-1155ஜி7/2.9ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ7-1195 ஜி5 பிராசஸர் உடன் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் இரண்டு பிராசஸர் விருப்பங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய லேப்டாப் வெளிவந்துள்ளது.

புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் மாடலில் 720 பிக்சல் வெப் கேமரா வசதி உள்ளது. பின்பு டூயல்-ஸ்டார் எல்இடி லைட் ஆதரவும் கொண்டுள்ளது இந்த அசத்தலான லேப்டாப். இதுதவிர இரண்டு டிஜிட்டல் மைக்ரோபோன்கள், டிடிஎஸ் ஆடியோ ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளுடன் இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் வெளிவந்துள்ளது.
அலுமினியம் அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் மாடல் 1.24 கிலோ எடை கொண்டிருக்கிறது. பின்பு 50Wh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய லேப்டாப் மாடல். எனவே இந்த லேப்டாப் 10 மணி நேரம் வீடியோ பிளேபேக் ஆதரவை வழங்கும். அதேபோல் 65W டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜர் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப்.

குறிப்பாக இந்த லேப்டாப் மாடலை 55 நிமிடங்களில் 60% வரை சார்ஜ் செய்ய முடியும். சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும். அதேபோல் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.29,990-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த லேப்டாப் மாடலை ரூ. 27,990-விலையில் வாங்க முடியும். ஜூன் 9 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








