விண்டோஸ்-ஐ விட லீனக்ஸில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள்

By Siva
|

ஒரு கம்ப்யூட்டருக்கு சிறந்த ஓஎஸ் எது? விண்டோஸ் அல்லது லீனக்ஸ் என்ற விவாதம் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் விண்டோஸ் ஓஎஸ் தான் பயன்படுத்தி வருகின்றனர். அதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் எக்ஸ் பயன்படுத்தப்படுகிறது

விண்டோஸ்-ஐ விட லீனக்ஸில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள்

மார்க்கெட்டில் போட்டியில் இருந்து விலகியிருந்தாலும் இன்னமும் லீனக்ஸ் ஓஎஸ் பல வாடிக்கையாளர்களின் மனதில் இருக்கின்றது என்றால் அதற்கென்று இருக்கும் ஒருசில சிறப்பு காரணங்கள் தான்.

மிகவும் எளிமையாக கையாளும் வகையில் காணப்படும் இந்த் ஓஎஸ், ஓப்பன் சோர்ஸ் வகையை சேர்ந்தது என்பதால் இலவச டவுன்லோடு அதிகம் கிடைக்கும். ஒரு பைசா செலவு இல்லாமல் இலவசமாக டவுன்லோடுகள் கிடைப்பது மட்டுமின்றி டவுன்லோடு செய்யும் ஃபைல்களை மாற்றிக்கொள்வதும் எளிது. இந்த கட்டுரையில் லீனக்ஸ் ஓஎஸ் குறித்த நன்மைகள், தீமைகள் குறித்து பார்ப்போம்

நன்மைகள்:

நன்மைகள்:

இலவச ஓப்பன் சோர்ஸ்

விண்டோஸ் ஓஎஸ்-ஐ விட லீனக்ஸ் ஓஎஸ் ஐ அதிக நபர்கள் விரும்புவதற்கு முதல் காரணம் இதுவொரு ஓப்பன் சோர்ஸ் இலவச ஓஎஸ். இந்த ஓஎஸ்க்காக வாடிக்கையாளர்கள் ஒரு நயாபைசா கூட செலவு செய்யாமல் சட்டரீதியாக இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

டவுண்லோடு செய்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே சோர்ஸ் கோட் எண் வழங்கப்படும். மேலும் விண்டோஸ் ஓஎஸ்-ஐ விட இதை இன்ஸ்டால் செய்வதும் மிக எளிது

நட்பு தொடர்புகள்

நட்பு தொடர்புகள்

லீனக்ஸ் ஓஎஸ் குறித்து எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக இண்டர்நெட் மூலம் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் சந்தேகங்களை லீனக்ஸ் நிவர்த்தி செய்து தரும் வகையில் உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு நட்பான தொடர்பாக உள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

லீனக்ஸில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் என்னவெனில் உங்கள் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு. லீனக்ஸ் ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டரில் அவ்வளவு எளிதில் மால்வேர் உள்ளே நுழைந்துவிட முடியாது. விண்டோஸ் ஓஎஸ் போல் எந்த ஒரு சிங்கிள் வைரஸையும் லீனக்ஸ் அனுமதிக்காது என்பது இதன் கூடுதல் சிறப்பு

அளவு:

அளவு:

லீனக்ஸ் ஓஎஸ் பலவிதங்களில் கிடைத்தாலும் ஒரு முழு லீனக்ஸ் ஓஎஸ் அதிகபட்சமாக உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து 2GB மெமரியை மட்டுமே எடுத்து கொள்ளும் சிறிய அளவிலான ஓஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தீமைகள்:

தீமைகள்:

மைக்ரோசாப்ட் விண்டோஸ் உபயோகித்தவர்கள் லீனக்ஸ் கம்ப்யூட்டருக்கு வந்தால் அவர்களுக்கு லீனக்ஸ் இணக்கத்தன்மையுடன் இருக்காது. குறிப்பாக மைக்ரோசாப்ட் வேர்டுக்கு மாற்றை இதில் கண்டுபிடிப்பது கடினம், மேலும் இந்த ஓஎஸ் இருந்தால் கேம்ஸ் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்து கொள்ள முடியாமை

புரிந்து கொள்ள முடியாமை

லீனக்ஸ் ஓஎஸ் பயன்படுத்தும் முன்னர் அதுகுறித்து முதலில் கொஞ்சம் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். விண்டோஸ் மாதிரி ஓஎஸ் போட்டவுடன் உங்களால் செயல்பட முடியாது. ஒருசில விஷயங்அக்ளை புரிந்து கொள்ள ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Comparison between Windows and Linux is an age old topic and a long-running matter since its inception. These days, the market is dominated by Microsoft's Windows, followed by Apple's Mac OS X.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X