ரூ. 4,999 விலையில் புதிய லேப்டாப்!

Posted By: Staff
ரூ. 4,999 விலையில் புதிய லேப்டாப்!
இங்கிலாந்தை சேர்ந்த அலைய்டு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் குறைந்த விலை கொண்ட லேப்டாப்பை இந்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த குறைந்த விலை கொண்ட லேப்டாப் ரூ. 4,999 விலை கொண்டதாக இருக்கும்.

ஆனால் இந்த குறைந்த விலை கொண்ட லேப்டைப் பற்றி அதிக தொழில் நுட்ப விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

குறைந்த விலை கொண்ட இந்த லேப்டாப் மற்ற லேப்டாப் சாதனங்களுக்கு சிறந்த வகையில் உதவியாக இருக்கும். அலைடு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இந்த லேப்டாப் ஆசிய நாடுகளில் அறிமுகமாக உள்ளது.

இந்நிறுவனத்தின் உயர்ந்த அதிகாரியான ஹிர்ஜி பட்டேல், குறைந்த விலை கொண்ட இந்த லேப்டாப்பினை உருவாக்க தொழில் நுட்பம் சம்பந்தமான சாதனங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.

இந்நிறுவனம் இன்னும் பல புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்வதாகவும் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஹிர்ஜித் பட்டேல் தெரிவித்துயிருக்கிறார்.

அலைய்டு கம்ப்யூட்டர்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய லேப்டாப்கள் 10 இஞ்ச் திரையினையும், இன்டெலின் 3-வது ஜெனரேஷன் ஐ-7 பிராசஸரையும், ஐ-3 பிராசஸரையும் கொண்டதாக இருக்கும்.

இந்த லேப்டாப்கள் ரூ. 19,999 மற்றும் ரூ. 49,999 விலை கொண்டதாகவும் இருக்கும் என்று ஹிர்ஜித் பட்டேல் கூறியுள்ளார். இதனால் அலைய்டு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திடன் புதிய லேப்டாப்கள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்