2 புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது ஏசர்

ஏசரின் இந்த இரண்டு புதிய டேப்லெட்டுகளுமே நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐகானியா 510 வைபை இணைப்புடன் வரும் என்று நம்பலாம். அதே நேரத்தில் ஐகானியா 511 வைபையுடன், 3ஜி வசதியும் பெற்று வரும் என எதிர்பார்க்கலாம்.
இரண்டு டேப்லட்டுகளுமே 1280 x 800 பிக்சல் ரிசலூசன் கொண்டு வருகின்றன. அதோடு இரண்டுமே என்விடியை டெக்ரா 3 எஸ்ஒசி ப்ராசஸர்கள் கொண்டு வருகின்றன. அதனால் இவற்றின் செயல்திறன் மிக வேகமாக இருக்கும். இரண்டுமே ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை கொண்டிருக்கும்.
ஐகோனியா 510 மற்றும் 511 ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு கொண்டு வருகின்றன. மேலும் ஆடியோ இணைப்புக்காக இவை 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கையும் கொண்டிருக்கும். தரமான வீடியோ அவுட்புட்டிற்காக இவை எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட்டையும் கொண்டுள்ளன.
இந்த டேப்லெட்டுகளில் இன்பில்ட் ஆன்லைன் சேவைகள் உள்ளதால் பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் ஆகியவற்றின் சேவைகளை மிக எளிதாக பெறலாம். மேலும் இந்த டேப்லெட்டுகள் எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பார்மெட்டுகளை, குறிப்பாக எம்பி3, எம்பிஇஜி4 மற்றும் எஎசி பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டவை.
இன்டர்நெட் பிரவுசிங்கிற்காக எச்டிஎம்எல் 5 மற்றும் ப்ளாஷ் போன்ற வசதிகளும் இந்த டேப்லட்டுகளில் உள்ளன. இரண்டுமே 64ஜிபி வரை விரிவு படுத்தக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்டைக் கொண்டுள்ளன. இதில் எஸ்எம்எஸ், எம்எம்எஸ் மற்றும் இமெயில் வசதிகளும் உள்ளன. மேலும் இவை கழற்றி மாற்றும் வசதிகொண்ட லித்தியம் அயான் பேட்டரி கொண்டு வருகின்றன.
ஐகானியா 510 மற்றும் 511 ஆகியவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இவை வரும் ஜனவரியில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications