இந்தியா: அசத்தலான ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் லேப்டாப் அறிமுகம்.!
ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் லேப்டாப் சாதனம் 21-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (2560-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த லேப்டாப் சாதனம்.
ஏசர் நிறுவனம் தற்சமயம் ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் வளைந்த திரை கேமிங் லேப்டாப் மாடலை அறிமுப்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலை மட்டும் சற்று உயர்வாக உள்ளது, இருந்தபோதிலும் பல்வேறு நவீன மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.
ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் லேப்டாப் மாடல் தற்சமயம் பிளிப்கார்ட் மற்றும் இ-காமர்ஸ் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஏசர் லேப்டாப் சாதனம்.

டிஸ்பிளே:
ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் லேப்டாப் சாதனம் 21-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (2560-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த லேப்டாப் சாதனம்.

தொழில்நுட்பம்:
இந்த லேப்டாப் சாதனத்தில் வளைந்த திரை மற்றும் NVIDIA G-SYNC தொழில்நுட்பமும் இடம்பெறுகிறது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

இன்டெல் கோர்
ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் லேப்டாப் பொதுவாக 7வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7-7820எச்கே செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதன்பின்பு எஸ்எல்ஐ-ல் உள்ள இரட்டை என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி. எக்ஸ் 1080 கிராபிக்ஸ் அட்டை இடம்பெற்றுள்ளது.

ஹார்ட் டிரைவ் :
இந்த ஏசர் சாதனத்தில் 1டிபி ஹார்ட் டிரைவ் மற்றும் 64GB ஆப் DDR4-2400 மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு செயல்திறன்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

4 ஸ்பீக்கர்:
ஹை-ஃபை தர ஒலி உருவாக்கும் 4 ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். மேலும் யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு அதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விண்டோஸ் 10:
இந்த சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதன்பின்பு விளையாட்டு, இணையம்
போன்ற பல்வேறு அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் லேப்டாப்.

விலை:
ஏசர் பிரிடேட்டர் 21எக்ஸ் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.6,99,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications