புதிய கன்வெர்டிபிள் கேமிங் நோட்புக்கை களமிறக்குகிறது ஏசர்

ஏசர் நிறுவனம் புதிய இரண்டு விண்டோஸ் 10 கேமிங் நோட்புக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

|

ஏசர் நிறுவனம் புதிய இரண்டு விண்டோஸ் 10 கேமிங் நோட்புக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அவையாவன: பிரிடாடர் ட்ரிடன் 900 என்ற 17 இன்ச் செயல்பாட்டு நோட்புக். இது ஒரு மெல்லிய வடிவமைப்பு மற்றும் கன்வெர்டிபிள் 4K டிஸ்ப்ளே கொண்ட சாதனமாகும். மற்றோன்று பிரிடாடர் ட்ரிடன் 500, இது ஒரு 15 இன்ச் முழுமையான மெட்டல் கேமிங் சாதனமாக அமைந்து, வெறும் 17.9 மிமீ (0.70 இன்ச்) தடிமன் மட்டுமே கொண்டது.

புதிய கன்வெர்டிபிள் கேமிங் நோட்புக்கை களமிறக்குகிறது ஏசர்

இவ்விரு லேப்டாப்களையும் குளுமையாக வைத்திருக்க, 4வது தலைமுறையைச் சேர்ந்த ஏரோப்ளேடு 3D மெட்டல் ஃபேன் அமையப் பெற்று, 45 சதவீதம் வரை காற்றோட்டம் கொண்டதாக வைத்திருக்கிறது. மேலும் நீண்டநேரத்திற்கு கிராஃபிக்ஸ் தொடர்பான கேம்கள் ஆடினால் கூட லேப்டாப்பை குளுமையாக வைத்திருக்க கூல்பூஸ்ட் தொழில்நுட்பம் உதவுகிறது.

பிரிடாடர் ட்ரிடன் 900

ஒரு கேம்மிங் நோட்புக்கான இந்த பிரிடாடர் ட்ரிடன் 900 இல் காணப்படும் CNC சாதனம் கொண்ட இசல் ஏரோ ஹின்ஜ், தெளித்தல், விரிவாக்குதல் அல்லது மறுவிரிவாக்கம் பணியைச் செய்கிறது. இதில் பயனர்கள் நான்கு மோடுகளை பயன்படுத்தலாம். கேம் ஆடும் போது நண்பர்களுடன் திரையை பகிர்ந்து கொள்ள டிஸ்ப்ளே மோடு, டச்ஸ்கிரீனில் கேம்கள் ஆடும் போது இசல் மோடு, வழக்கமான கேமிங் அனுபவத்திற்கு நோட்புக் மோடு. இதுதவிர ஸ்டாண்டு மோடும் உள்ளது.


புதிய NVIDIA ஜிபோர்ஸ் RTX 2080 மற்றும் NVIDIA G-SYNC தொழில்நுட்பத்துடன் கூடிய 4K IPS டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்ட பிரிடாடர் ட்ரிடன் 900 இல் 6-கோர் உயர் செயலாற்றல் கொண்ட 8வது தலைமுறை இன்டல் கோர் i7 ப்ராசஸர், NVMe PCIe RAID 0 SSDs மற்றும் 32GB DDR4 நினைவகம் வரை காணப்படுகிறது.

எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ரிசிவர் உடன் காணப்படும் இது, ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் கொண்ட விண்டோஸ் 10 இல் தங்களுக்கு பிடித்தமான கம்ப்யூட்டர் கேம்களை விளையாட பயனருக்கு உதவுகிறது. வேவ்ஸ் மேக்ஸ் மூலம் உயர்தர ஒலி தரம் கிடைக்கிறது. ஹெட் ட்ராக்கிங் கொண்ட வேவ்ஸ் Nx மூலம் சிறப்பான 3டி ஆடியோ அனுபவத்தை பெற முடிகிறது.

புதிய கன்வெர்டிபிள் கேமிங் நோட்புக்கை களமிறக்குகிறது ஏசர்

பிரிடாடர் ட்ரிடன் 500

இந்த பிரிடாடர் ட்ரிடன் 500 இல் 15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளே காணப்படுகிறது. இதில் நீண்டகாலம் உழைக்க கூடிய முழுமையான மெட்டல் சேஸ் மற்றும் 6.3 மிமீ (0.25 இன்ச்) மட்டுமே கொண்ட குறுகலான பேசில் ஆகியவற்றை கொண்டு, கச்சிதமான 81 சதவீத பாடி - ஸ்கிரீன் விகிதத்தை பெற்றுள்ளது.

பிரிடாடர் ட்ரிடன் 500 இல் NVIDIA ஜிபோர்ஸ் RTX 2080 GPUs தவிர, மேக்ஸ்-Q வடிவமைப்பு பெற்று, 8வது தலைமுறை இன்டல் கோர் i7 ப்ராஸசர்கள், NVMe PCIe RAID 0 SSDs மற்றும் 32GB DDR4 வரையிலான நினைவகம் ஆகியவை உள்ளன. இதன் GPU காலம்கடந்தது மற்றும் VR-ரெடி ஆகும். 15.6 இன்ச் 300 நிட்ஸ் IPS டிஸ்ப்ளே கொண்டு 144Hz புத்துணர்வு வேகத்தை பெற்று 3ms-யை மேற்கொள்கிறது.


ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தலாம்
கடந்த ஆண்டு முதல் கிடைக்கப் பெறும், பிரிடாடர்சென்ஸ் என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் பிரிடாடர் கம்ப்யூட்டர்களை, ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் ஓவர்கிளாக்கிங், பேன் வேகம், லைட்டிங் மற்றும் ஆடியோ மோடுகள் ஆகியவற்றின் அமைப்புகளை மாற்றி அமைக்க முடியும். பயனரால் கம்ப்யூட்டரில் உள்ள லைட்டிங் ப்ரோபைலை செயல்படுத்த முடியும் அல்லது லைட்டிங் ப்ரோபைலை தனியாக போடலாம். இதனுடன், ஹாட்கீக்களுக்கான மைக்ரோ கீ செட்களை பயனர்கள் மாற்றி அமைக்க முடியும்.

இந்த டிரிடான் 900 உடன் பிரிடாடர் RGB அசால்ட் என்ற அப்ளிகேஷனையும் ஆதரிக்கிறது. இதன்மூலம் லீக் ஆஃப் லீஜென்ட்ஸ் கேமர்கள் பயன் பெறலாம். இதில் சாம்பியன்கள் திறமையை வெளிப்படுத்தும் போது, ஏற்கனவே குறிப்பிட்டுள்ள லைட்டிங் தன்மைகள் காட்டப்படுகிறது. தங்கள் சாம்பியன் உடைய திறமைக்கு ஏற்ப, லைட்டிங் தன்மைகளை பயனர்கள் மாற்றி அமைக்கலாம்.

புதிய கன்வெர்டிபிள் கேமிங் நோட்புக்கை களமிறக்குகிறது ஏசர்
விலை மற்றும் கிடைக்கும் இடம்
வரும் மார்ச் மாதத்தில் இருந்து பிரிடாடர் ட்ரிடான் 900, வட அமெரிக்காவில் 3,999 அமெரிக்க டாலர்களில் கிடைக்கப் பெறும். அதே நேரத்தில் EMEA இல் மார்ச் மாதம் முதல் €4,199-க்கு கிடைக்கும். சீனாவில் மார்ச் மாதம் முதல் ¥39,999 என்ற துவக்க விலையில் கிடைக்கப் பெறும்.

வரும் பிப்ரவரி மாதம் முதல் பிரிடாடர் ட்ரிடான் 500, வட அமெரிக்காவில் 1,799 அமெரிக்க டாலர்கள் என்ற துவக்க விலையில் கிடைக்கும். அதே நேரத்தில் EMEA இல் €1,999 என்ற துவக்க விலையில் கிடைக்கும். சீனாவில் ஜனவரி மாதம் முதலே ¥16,999 என்ற துவக்க விலையில் கிடைக்க ஆரம்பிக்கும்.

Best Mobiles in India

English summary
Acer unveils new Predator Triton 900 convertible gaming notebook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X