புதிய டேப்லட்டை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஏசர்!

இதில் 10.1 இஞ்ச் தொடுதிரையின் மூலம் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். இந்த டேப்லட்டில் சிறந்த தொழில் நுட்ப வசதியினை வழங்கும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.
இன்னும் இந்த டேப்லட்டில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இதில் டெக்ராஸோன் அப்ளிக்கேஷன் வசதி உள்ளது. இதனால் நிறைய அப்ளிக்கேஷன்களையும், கேம்களையும் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். இந்த டேப்லட் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும்.
இன்னும் இதில் வைபை தொழில் நுட்ப வசதியினையும் பயன்படுத்த முடியும். இதில் லித்தியம் பாலிமர் 9,800 எம்ஏஎச் பேட்டரியினையும் பயன்படுத்தலாம். இதனால் தொழில் நுட்பத்தினை சிறந்த முறையில் பயன்படுத்த, சிறந்த ஆற்றலினையும் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைபை மற்றும் 3ஜி தொழில் நுட்பத்தனையும் சேர்த்து இந்த டேப்லட்டினை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏசர் டேப் ஏ-510 டேப்லட்டின் விலை ரூ.24,000 கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications