பயணத்திற்கு ஏற்ற இலகு எடையுடன் புதிய நெட்புக்: ஏசர் அறிமுகம்

Posted By: Staff

பயணத்திற்கு ஏற்ற இலகு எடையுடன் புதிய நெட்புக்: ஏசர் அறிமுகம்
ஏசரின் புதிய ட்ராவல்மேட் நெட்புக் லேப்டாப் பார்ப்பதற்கும் மிக அழகாகவும், தடிமன் குறைவாகவும் இருக்கிறது. இந்த புதிய ஏசர் ட்ராவல்மேட் டைம்லைன் 8481டி நெட்புக், அடிக்கடி பயணம் செய்பவர்களின் வசதிகளை கருத்தில்க்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 இஞ்ச் திரை கொண்ட இந்த நெட்புக் நீண்ட நேரம் சார்ஜை வழங்கும் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இது 1.45 கிலோ எடை கொண்டது.

இந்த நெட்புக்கில் ஆப்டிக்கல் ட்ரைவ் இல்லாதது ஒரு குறையாகப் பார்க்கப்பட்டாலும், செயல் திறன் மூலம் அந்த குறையை போக்கிவிடுகிறது. மேலும் இது மெக்னீசியம்-அலுமினியம் அலாய் கொண்டு தாயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதன் 14 இன்ச் திரையில் பீசல்ஸ் இணைக்கப்படவில்லை. மேலும் இந்த திரை எதிரொலிக்காமல் இருப்பதால் கண் கூசாது மற்றும் வெளிச்சமான இடங்களில் சிறப்பாக இதில் வேலை செய்யலாம். திரையின் ரிசலூசன் 1600 x 900 ஆகும்.

இதிலுள்ள ஏசர் பைன் டச் மாடல் கீபோர்ட் டைப் செய்வதற்கு மிக வசதியாக இருக்கிறது. ஆனால், கீபோர்டில் உள்ள பட்டன்கள் அனைத்தும் சற்று உயரம் கூடுதலாக இருப்பதால் அதன் நீடித்து உழைக்குமா என்பதை கணிக்க முடியவில்லை.

மேலும் இதன் டச்பேட் பெரிதாக இருப்பதால் கர்சரை நகர்த்துவது எளிதாக இருக்கும். மேலும் மல்டி டச் வசதி இருப்பதால் சூம் செய்வதும ஸ்க்ரோல் செய்வது இதில் எளிதாக இருக்கும். மேலும் கைரைக்கான ஸ்கேனரும் இந்த டச்பேடில் உள்ளது.

8481டி விண்டோஸ் 7 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் இது 1.6 கிஹர்ட்ஸ் இண்டல் கோர் ஐ5-2467எம் ப்ராசஸர் பெற்றுள்ளது. மேலும் இதன் ராம் 3 ஜிபி ஆகும். இதை 8ஜிபி வரை விரிவாக்க முடியும். மேலும் இது இண்டக்ரேட் இண்டல் எச்டி 3000 க்ராபிக்ஸ் யூனிட்டுடன் கூடிய சிபியு கொண்டிருப்பதால் இது முழுமையான எச்டி வீடியோவை சப்போர்ட் செய்யும்.

மேலும் என்விடியா சிபியுக்களும் ஆப்சனலாக உள்ளது. இதன் 320ஜிபி மற்றும் 64ஜிபி வரை விரிவுபடுத்தக் கூடிய எஸ்எஸ்டி மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் இதன் ஜிகாபிட் எர்த்நெட் தொடர்புடன் கூடிய 802.11 வைபை, 3ஜி மற்றும் வி3.0 ப்ளூடூத் அகியவை இந்த லேப்டாப்புக்கு மேலும் மெருகு ஏற்படுத்தும்.

8481டி எஸ்டி கார்ட் ரீடர், வைபை ஸ்விட்ச், எச்டிஎம்ஐ இஎஸ்எடஎ போர்ட், விஜிஎ அவுட், எர்த்நெட் ஆர்ஜே-45 ஜாக், ஒரு ஆடியோ போர்ட் ஜோடி மற்றும் வி3.0 யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி 9 மணி நேரம் தாங்கும் சக்தி கொண்டது. மேலும் இதை 1,000 முறைக்கும் மேலாக சார்ஜ் செய்யலாம். இதன் விலை ரூ.50,000க்குள் இருக்கும்.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot