Home
Computer

புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் பெறும் ஏசர் ஐகானியா டேப்!

By Karthikeyan
புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் பெறும் ஏசர் ஐகானியா டேப்!

ஏசர் ஐகானியா டேப் ஏ200 தற்போது ஆன்ட்ராய்டின் 4.0 வெர்ஷன் அப்டேட் பெறுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் கூடுதல் வசதிகளை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏசர் ஐகானியா டேப் எ200 இப்போது டேப்லெட் துறையில் புதிய வரவு. இதனுடைய உயர்ந்த தரம் மற்றும் சிறந்த ஹார்ட்வேர் அம்சங்களுக்காக வாடிக்கையாளர்களிடம் நல்லதொரு வரவேற்பையும் இந்த டேப்லெட் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்போது வந்திருக்கும் புதிய செய்தி, தற்போது ஐகானியா டேப் ஏ200 ஆன்ட்ராய்டு 4.0 வெர்ஷன் அப்டேட் பெறுகிறது.

ஏற்கனவே இந்த அப்டேட் தொடங்கிவிட்டது. மேலும் இந்த டேப்லெட்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் அது பற்றிய செய்தி அனுப்பப்பட்டுவிட்டது. இந்த அப்டேட்டை மிக எளிதாக ஆன்லைன மூலம் வாடிக்கையளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அப்டேட் மூலம் இந்த டேப்லெட்டின் இயங்கு தளம் முழுமையாகப் புதுப்பி்க்கப்பட்டிருக்கிறது. அதுபோல் இதன் விசுவல் இன்டர்பேசும் மேம்படுத்தப்படும். அதுபோல் புதிய திரை ட்ராசிசன்கள் மற்றும் வைப்ரன்ட் நிறங்கள் போன்றவை இந்த டேப்லெட்டில் வரும்.

இந்த புதிய அப்டேட் ஏற்கனவே சுவீடன், ஜெர்மனி, இங்கிலாந்து, மற்றும் பிரான்சு போன்ற நாடுகளில் தொடங்கிவிட்டது. ஆனால் அமெரிக்காவில் இன்னும் 2 நாள்களில் இந்த அப்டேட் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

இந்த அப்டேட் செய்தவுடன் டேப்லெட்டை இரண்டு முறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். பின் டேப்லெட் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X