தரமான அம்சங்களுடன் ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
இந்தியாவில் ஏசர் நிறுவனத்தின் அனைத்து லேப்டாப் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு லேப்டாப் மாடலும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம்.

இந்த புதிய ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் ஆனது 360 டிகிரிக்கு சுழலும், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு எடைகுறைவான மெல்லியா லேப்டாப் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1,920x1,080 பிக்சல்கள்
ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1,920x1,080 பிக்சல்கள் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு 250 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த புதிய லேப்டாப் மாடல்.

ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சிக்ஸ் ஜெனரல் 2 5ஜி கம்ப்யூட் பிளாட்பார்ம் மற்றும் குவால்காம் கிரியோ 495 ஆக்டா-கோர் சிபியு மற்றும் கிராபிக்ஸ்-ஐ குவால்காம் அட்ரினோ 685 ஜி.பீ.யு உள்ளிட்ட சிறந்த மென்பொருள் வசதி இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடலில் 8ஜிபி எல்பிடிடிஆர் 4 எஸ்டிஆர்ஏஎம் வசதியும், 512 ஜிபி யுஎஃப்எஸ் ஸ்டோரேஜ் வசதியும் இடம்பெற்றுள்ளன. மேலும் விண்டடோஸ் 10 ப்ரோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
இந்த ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடலில் 720p ரெசல்யூஷன் கொண்ட எச்டி வெப்கேம் வசதி இடமபெற்றுள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கைரேகை ரீடர் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

56Whr பேட்டரி வசதி
ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடலில் 56Whr பேட்டரி வசதி உள்ளது. மேலும் இது 29 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் டச்பேட் மல்டி-டச் கெஸ்டர்களை ஆதரிக்கும் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

மேலும் 4 ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.0, டி.சி-இன் மற்றும் பவர்-ஆஃப் சார்ஜிங் கொண்ட யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்பின் 7 லேப்டாப். குறிப்பாக இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல்.

ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடலின் விலை ரூ.1,34,999 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏசர் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ், ஏசர் ஆன்லைன் ஸ்டோர் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்கள் வழியே இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும். தற்சமயம் இந்த லேப்டாப் மாடல் சிங்கிள் ஸ்டீம் ப்ளூ நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications