இந்தியா : அட்டகாசமான ஏசர் பிரிடேட்டர் ட்ரைடான் 700 அறிமுகம்.!
இக்கருவி 7-வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது, என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1080 கிராபிக்ஸ் இவற்றில் இடம்பெற்றுள்ளது
ஏசர் நிறுவனம் இப்போது ஏசர் பிரிடேட்டர் ட்ரைடான் 700 அல்ட்ராதின் கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த லேப்டாப் மாடல் கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. விடியோ கேம் போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த பிரிடேட்டர் ட்ரைடான் 700 லேப்டாப்.
என்விடியாவின் மேக்ஸ்-கே தொழில்நுட்பம் மற்றும் ஏரோ பிளேடு 3டி மெட்டல் போன்றவை இருப்பதால் இந்த கேமிங் லேப்டாப்-ஐ பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஏசர் பிரிடேட்டர் ட்ரைடான் 700 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளே
இந்த ஏசர் பிரிடேட்டர் ட்ரைடான் 700 அல்ட்ராதின் கேமிங் லேப்டாப் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்பி அட்மோஸ்:
ஏசர் பிரிடேட்டர் கேமிங் லேப்டாப் சிறந்த டால்பி அட்மோஸ் ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றது. மேலும் இது இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஏசர் பிரிடேட்டர் ட்ரைடான் 700 லேப்டாப்.

இன்டெல் கோர்:
இக்கருவி 7-வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது, என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1080 கிராபிக்ஸ் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேமிங் லேப்டாப்.

கார்னிங் கொரில்லா கண்ணாடி:
இந்த கேமிங் லேப்டாப் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவருகிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது
இந்த ஏசர் பிரிடேட்டர் ட்ரைடான் 700 லேப்டாப்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் வி4.1, யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி 2.0, எச்டிஎம்ஐ போர்ட், கில்லர் டபுள்ஷாட் ப்ரோ நெட்வொர்க்கிங், ஜிகாபிட் ஈதர்நெட் போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4670எம்ஏஎச்:
இந்த சாதனம் 4670எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, 5மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்கும். மேலும் 2.6கிலோ எடை
கொண்டவையாக உள்ளது இந்த கேமிங் லேப்டாப்.

விலை:
ஏசர் பிரிடேட்டர் ட்ரைடான் 700 லேப்டாப் சாதனத்தின் விலை மதிப்பு ரூ.2,99,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications