இந்தியா : ஏசர் பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப் அறிமுகம்.!
டால்பி ஆடியோ பிரீமியம் மற்றும் ஏசர் ஹார்மனி அம்சங்கள் "நம்பமுடியாத ஒலி ஆழம், பரந்த பாஸ், கேமிங் மற்றும் திரைப்படம் பார்க்கும் வசதி இவற்றில் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த வருட இறுதியில் பல லேப்டாப் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, ஏசர் லேப்டாப் தற்சமயம் இந்தியாவில் ஏசர் பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப் அறிமுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த கேமிங் லேப்டாப் பல்வேறு சிறப்பம்சங்களை
கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.1,29,999ஆக உள்ளது, விலைக்கு தகுந்தபடி பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன என்று ஏசர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்:
இந்த கேமிங் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.1,29,999ஆக உள்ளது, மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த லேப்டாப் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15.6-இன்ச்:
இந்த ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப் 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த லேப்டாப் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்டெல் கோர் :
இக்கருவி ஏழாவது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 மற்றும் ஐ7 ஆதரவு கொண்டுள்ளது, மேலும் 4ஜிபி ஜிடிடிஆர்5, 8ஜிபி டிடிஆர்4 ரேம்கொண்டுள்ளது, மேலும் 1டிபி ஹார்ட் டிரைவ் கொண்டுள்ளது இந்த கேமிங் லேப்டாப்.

டால்பி ஆடியோ:
டால்பி ஆடியோ பிரீமியம் மற்றும் ஏசர் ஹார்மனி அம்சங்கள் "நம்பமுடியாத ஒலி ஆழம், பரந்த பாஸ், கேமிங் மற்றும் திரைப்படம் பார்க்கும் வசதி இவற்றில் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விளையாட்டு போன்ற அம்சங்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
யுஎஸ்பி 3.1 டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், கார்டு ரீடர், எச்டிஎம் 2.0 போர்ட், மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப்.

ஏசர் பிரிடேட்டர்:
ஏசர் பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப் அதிக இடத்தைப் பெறாமல் 35 சதவிகிதம் காற்றோட்டத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பயன்படுத்துவதற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications