ரூ.22,999-விலையில் ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல் அறிமுகம்.!
ஏசர் நிறுவனம் தனது புதிய ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் ரூ.22,999-விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல் ஆனது இ-ஸ்டோரிலும், இந்தியா முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட ஏசர் சேனல் பார்ட்னர்
ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஆனது 3 வருட உத்தரவாதத்துடன் வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஏசர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த லேப்டாப் மாடல் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஐடி உள்கட்டமைப்பை அமைக்க அல்லது மேம்படுத்த உதவும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல் 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு இன்டெல் பென்டியம் கோல்ட் செயலி மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்த சாதனம்.

ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல் ஆனது 4GB DDR4 ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இன்டெல் வைஃபை 10 ப்ளூடூத் இணைப்புடன் ஹோஸ்ட் செய்யப்படுகிறது இந்த அட்டகாசமான சாதனம்.

ஏசர் ஒன் 14 லேப்டாப் மைக்ரோஃபோனுடன் எச்டி கேம் மற்றும் 4 மணிநேர பேட்டரி ஆயுள் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, மேலும் இது விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 ஜிகாபிட் லேன் போர்ட், 2 யூ.எஸ்.பி 3.0 டைப்-ஏ, 1 யூ.எஸ்.பி 2.0 டைப் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்புஇந்த சாதனம் சற்று மலிவு விலையில் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த ஏசர் ஒன் 14 லேப்டாப் அறிமுக நிகழ்வில் பேசிய ஏசர் இந்தியாவின் வணிக வணிகக் குழுவின் தலைவர் சுதிர் கோயல், "நிறுவன மற்றும் கல்வித் துறையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய மலிவு ஏசர் ஒன் 14 மடிக்கணினியை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சிஅடைகிறேன், பின்பு வேலையில் உற்பத்தித்திறன் அல்லது மாணவர்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு ஆதரவுகளுக்கு இந்த சாதனம் அருமையாக உதவும் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications