இந்தியா : 16ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப்.!

By Prakash
|

ஏசர் நிறுவனம் இந்தியாவில் அதிகஅளவு லேப்டாப் மாடல்களை விற்பனை செய்து வருகிறது, அதன்படி இப்போது புதிய 16ஜிபி ரேம் கொண்ட ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த லேப்டாப் பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் பொறுத்தவரை தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும் அதன்பின் அனைத்து ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த லேப்டாப் பொறுத்தவரை 15.6-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப்.

 6ஜிபி ரேம்  :

6ஜிபி ரேம் :

ஏசர் நைட்ரோ 5 பொதுவாக ஏழாவது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 செயலி கொண்டுள்ளது, அதன்பின் கிராபிக்ஸ்அடிப்படையில், மிக அருமையாக இருக்கும் இந்த ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப்.

ஏசர் நைட்ரோ 5 :

ஏசர் நைட்ரோ 5 :

ஏசர் நைட்ரோ 5 பொறுத்தவரை 4ஜிபி ஜிடிடிஆர்5 ரேம் உடன் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1050 அல்லது ஜியிபோர்ஸ் 1050டிஐ இடம்பெற்றுள்ளது . மேலும் 1டிபி எச்டிடி சேமிப்பகத்துடன் இந்த லேப்டாப் வெளிவருகிறது.

டால்பி ஆடியோ:

டால்பி ஆடியோ:

டால்பி ஆடியோ பிரீமியம் மற்றும் ஏசர் ஹார்மனி அம்சங்கள் "நம்பமுடியாத ஒலி ஆழம், பரந்த பாஸ், கேமிங் மற்றும் திரைப்படம் பார்க்கும் வசதி இவற்றில் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 விலை:

விலை:

ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.75,990க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பிளிப்கார்ட்வலைதளம் மூலம் இந்த லேப்டாப் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Acer Nitro 5 Gaming Laptop With 16GB RAM Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X