வைரஸ் தாக்கினாலும் வலுவிழக்காத புதிய ஏசர் கம்ப்யூட்டர்

By Karthikeyan
|
வைரஸ் தாக்கினாலும் வலுவிழக்காத புதிய ஏசர் கம்ப்யூட்டர்

ஏசரின் ஏசர் வேரிட்டோன் உலக அளவில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு கனிணியாகும். இந்த வரிசையில் வரும் கனிணிகள் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

குறிப்பாக வீட்டில் இருப்பவர்களுக்கும் அதுபோல் வேலையில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த கனிணி மிகவும் உபயோகமாக இருக்கும். வேரிட்டோன் வரிசையில் வரும் கனிணிகள் பல பிரிவுகளில் வருகின்றன.

முதலில் சொல்ல வேண்டுமென்றால் ஏசர் ஸட்620ஜி கனிணி எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய கனிணி ஆகும். குறிப்பாக இந்த கனிணி சிபியு, ஸ்பீக்கர்கள், டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும் இதன் மானிட்டர் எல்லாமே ஒரு தனி யூனிட்டில் இருக்கும்.

இந்த கம்ப்யூட்டர் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளையும் அழகாக பூர்த்தி செய்யும். வேரிட்டோன் கருப்பும் வெள்ளியும் கலந்த நிறத்தில் வருகிறது. இது 20 இனச் எல்இடி திரை கொண்டுளளது. இந்த எல்இடி வசதி எல்சிடி வசதியை விட ரேசியோவிலும், படங்களைப் பெரிதாக்கித் தருவதிலும் உயர்ந்து இருக்கிறது.

இதன் திரையில் பிக்சல் ரிசலூசன் 16000X900 பிக்சல்கள் ஆகும். இது 2.5 ஜிஹெர்ட்ஸ் இன்டல் கோர் ஐ5 ப்ராசஸர் கொண்டுள்ளது. அதுபோல் இது 4ஜிபி டிடிஆர்3 மெமரியைக் கொண்டுள்ளது. அதுபோல் இதன் மெமரியை 8ஜிபி வரை விரிவு படுத்தலாம்.

வேரிட்டோனின் இன்டர்னல் ஹார்ட் டிஸ்க் 500ஜிபியைக் கொண்டிருக்கிறது. அதனால் அலுவலகம் சார்ந்த அனைத்து தகவல்களையும் இதில் சேமித்து வைக்க முடியும். அதே நேரத்தில் வீடிடில் இருப்பவர்கள் இந்த கனிணியில் ஏராளமான படங்கள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களை சேமித்து வைக்கலாம்.

இதில் என்விடியை ஜிஇ-போர்ஸ் ஜிடி520எம் க்ராபிக்ஸ் கார்டு இருப்பதால் இது ஒரு சக்தி வாய்ந்த மல்டி மீடியா டிவைசாகவும் பயன்படும். இதன் க்ராபிக்ஸ் கார்டு உயர் க்ராபிக்ஸ் வீடியோ கேம்களுக்கு உத்திரவாதம் வழங்கும்.

வேரிட்டோனில் உள்ள ஸ்பீக்கர்கள் டோல்பை ஒலியை வழங்குகின்றன. அதுபோல் இதன் முகப்பில் வெப்காமும் உள்ளது. இதில் உள்ள மைக்ரோபோனுடன் கூடிய வெப்காம் இருப்பதால் வீடியோ சாட்டிங் செய்வதற்கு மிக அருமையாக இருக்கும்.

இந்த கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 புரோபசனல் இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த இயங்குதளம் மைக்ரோசாப்டின் வரவிருக்கும் விண்டோஸ் 2020 இயங்குதளத்தையும் சப்போர்ட் செய்யும். அதனால் இதன் இயங்குதளத்தை உடனடியாக அப்க்ரேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வேரிட்டோன் 6 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. இதில் 2 யுஎஸ்பி 4.0 போர்ட்டுகளையும் மற்றவை யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளையும் கொண்டுள்ளன. மேலும் இதிலுள்ள ஆப்டிக்கல் ட்ரைவ் டிவிடி, சிடி மற்றும் மல்டி அடுக்கு கொண்ட டிவிடிக்கைளையும் சப்போர்ட் செய்யும்.

இந்த கணினி ஏசர் ப்ரோ ஷீல்டு டேட்டா கார்டிங் தொழில் நுட்பத்தைக் கொண்டு வருகிறது. அதனால் இது வெர்ச்சுவல் பைல் ஸ்ரடெரையும் மற்றும் என்க்ரிப்டட் மறைவான ட்ரைவையும் கொண்டுள்ளது.

அதனால் இந்த கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டால் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இதில் உள்ள ஒன் டச் ரிகவரி பட்டன் மூலம் கனிணியை புதுப்பிக்க முடியும். அதை மீண்டும் செட் செய்ய முடியும்.

இவ்வளவு வசதிகளையும் கொண்ட இந்த கணினி ரூ.40,000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X