Home
Computer

ஏசர் களமிறக்கும் 2 புதிய டேப்லட்கள்!

By Super

ஏசர் களமிறக்கும் 2 புதிய டேப்லட்கள்!
ஏசர் நிறுவனம் புதிதாக இரண்டு டேப்லட்களை அறிமுகம் செய்துள்ளது. ஐகோனியா டேப் ஏ-110 மற்றும் ஐகோனியா டேப் ஏ-210 என்ற இந்த டேப்லட்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்பங்களை வழங்கும் என்று கருதப்படுகிறது.

லேப்டாப்பினை வாடிக்கைக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்த உருவாக்கப்பட்டது தான் டேப்லட்கள். இந்த டேப்லட்களை நிறைய நிறுவனங்கள் சிறந்த முறையில் வழங்கி வருகிறது.

இதில் ஏ-110 டேப்லட் 7 இஞ்ச் திரையினை கொண்டது. இந்த திரையில் மூலம் அதிகபட்சம் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும். இதில் குவாட் கோர் என்வீடியா டெக்ரா-3 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. டேப்லட்கள் சிறப்பாக செயல்பட அதன் பிராசஸர்கள் மிக முக்கியமான ஒன்று.

ஏ-110 8 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியினை பெற முடியும். இதன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் சிறப்பான பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

ஏ-110 டேப்லட்டில் முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த ஏ-110 டேப்லட், டேப் ஏ-100 டேப்லட்டின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்று கூட சொல்லலாம்.

ஏசர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இன்னொரு டேப்லட்டான ஏ-210, 10.1 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. இந்த திரை 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். குவாட் கோர் பிராசஸர் என்வீடியா டெக்ரா-3 பிராசஸர் வசதியினையும் கொண்டது.

ஏசர் ஏ-210 டேப்லட் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி என்று இதில் 2 விதமான ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 3,620 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. இந்த ஏ-210 டேப்லட்டும் முகப்பு கேமராவினை கொண்டது.

ஏசர் ஏ-110 டேப்லட் ரூ.11,000 விலையினை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏசர் ஏ-210 டேப்லட்டின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. இந்த டேப்லட்களின் விலை விவரத்தினை பெற இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X