'அவென்சர் வார்' -ஸ்பெசல் லேப்டாப்பை வெளியிட்ட ஏசர்.!

ஆஸ்பையர்6 - கேப்டன் அமெரிக்கா லேப்டாப்பில் சிறப்பம்சமாக, கேப்டன் அமெரிக்காவின் ஐகானான பென்டகிராம் அலுமினிய வெளிப்புறத்தில் இடம்பெற்றுள்ளது.

|

விரைவில் வெளியாகவுள்ள 'அவென்சர் இன்பைனிடி வார்' என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு, மார்வெல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து 3 ஸ்பெசல் எடிசன் லேப்டாப்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஏசர்(Acer). கேப்டன் அமெரிக்கா வகை ஆஸ்பையர்6 லேப்டாப்பின் விலை ரூ63,999. தானஸ் வகை நிட்ரோ5 லேப்டாப்பின் விலை ரூ80,999 மற்றும் அயர்ன் மேன் வகை ஸ்விட் 3 லேப்டாப்பின் விலை ரூ79,999 ஆகும். இந்த 3 வகை லேப்டாப்களும் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஏசர் டீலர் கடைகளிலும் ஏப்ரல் 20 முதல் கிடைக்கும். ஏப்ரல் 23 முதல் ஆன்லைன் சந்தையில் அமேசானில் மட்டும் கிடைக்கும்.

'அவென்சர் வார்' -ஸ்பெசல் லேப்டாப்பை வெளியிட்ட ஏசர்.!


ஆஸ்பையர்6 - கேப்டன் அமெரிக்கா லேப்டாப்பில் சிறப்பம்சமாக, கேப்டன் அமெரிக்காவின் ஐகானான பென்டகிராம் அலுமினிய வெளிப்புறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் இன்டெல் 8ம் தலைமுறை கோர் i5 8250U சி.பி.யூ உடன் 8GB DDR4 ரேம், 1TB ஹார்டு டிரைவ், நிவ்டியா ஜீபோர்ஸ் MX150 GPU மற்றும் எச்.டி வெப்கேமரா போன்ற வசதிகள் உள்ளன. டால்பி ஆடியோ வழங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வைபை 802.11ac உடன் 2×2MIMO ஆண்டானா மற்றும் ஜிகாபிட் லேன் வசதியும் இந்த லேப்டாப்பில் உள்ளது. 15.6 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை, யூ.எஸ்.பி டைப்-சி, 3.0, 2.0 போர்ட்களும் உள்ளன.

அடுத்ததாக, நைட்ரோ 5- தானஸ் லேப்டாப்பை பொறுத்தவரை சிறப்பம்சமாக, தானஸ் குறியீடு ஐ.எம்.ஆர் தொழில்நுட்பம் மூலம் செம்மையான வெளிப்புறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் இன்டெல் 7ம் தலைமுறை கோர் i5 7300HQ சி.பி.யூ உடன்32GB வரை பயனர் மேம்படுத்தக்கூடிய 8GB DDR4 ரேம், 128GB SDD ப்ளஸ் உள்ள 1TB ஹார்டு டிரைவ், 4GB GDDR5 வி-ரேம் உள்ள நிவ்டியா ஜீபோர்ஸ் GTX 1050 போன்ற வசதிகள் உள்ளன. 15.6 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை மற்றும் ஏசர்ஸ் கூல் பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ள இரட்டை எக்ஸாஸ்ட் பேன் உள்ளது.

கடைசியாக, ஸ்விட் 3 அயர்ன் மேன் லேப்டாப் வெறும் 1.6கிலோ எடையுடன் 17.95 மில்லிமீட்டர் அடர்த்தி கொண்டது. சிவப்பு நிறத்திலான இந்த லேப்டாப்பில், அயர்ன் மேனின் சிக்நேச்சர்ஆர்க் ரியேக்கடரும், பவர் ஆன் செய்திருக்கும் போது ஒளிரும் தன்மையும் கொண்டுள்ளது. இதில் இன்டெல் கோர் i5 8250U சி.பி.யூ உடன் 8GB ரேம், 256GB SSD,

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

கிராப்பிக்ஸ் மற்றும் 10மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரி போன்ற வசதிகள் உள்ளன. வைபை 802.11ac , 14 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வசதிகளும் உள்ளன.

'அவென்சர் வார்' -ஸ்பெசல் லேப்டாப்பை வெளியிட்ட ஏசர்.!


இவற்றை வெளியிட்டு ஏசர் இந்தியாவின் சி.எம்.ஓ சந்திரஹாஸ் பனிகிரகி பேசுகையில், இந்த டிஸ்னி கதாபாத்திரங்கள் மூலம் மார்வெல் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுடன் மேலும் நெருக்கமாக்குகிறது. புதிய அனுபவம், பொழுதுபோக்கு மற்றும் அதீத கேமிங் அனுபவம் வேண்டுமென்பவர்கள், அவென்சர் மற்றும் மார்வெல் யுனிவெர்ஸ் ரசிகர்களை இது கவரும் என்றார்.

Best Mobiles in India

English summary
Acer Launches Avengers Infinity War Special Edition Laptops in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X