Home
Computer

30 புதிய லேப்டாப்கள்! வரிசை கட்டும் ஏசர்!

By Super

30 புதிய லேப்டாப்கள்! வரிசை கட்டும் ஏசர்!
புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்குவதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்களின் கவனத்தினை பெற்றுள்ளது ஏசர் நிறுவனம்.

இதில் 30 புதிய நோட்புக் லேப்டாப்களை வெளியிட்டுள்ளது ஏசர் நிறுவனம். இதில் சில லேப்டாப்களின் தொழில் நுட்பம் மற்றும் விலை விவரத்தினையும் பார்ப்போம்.

ஏசர் ஏஸ்பையர் டைம்லைன் அல்ட்ரா எம்-3 நோட்புக் 20 எம்எம் தடிமன் கொண்டது. மிக எளிதாக கையாளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நோட்புக் செகன்ட் ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர் வசதியினை வழங்கும்.

என்விஐடிஐஏ ஜிஃபோர்ஸ் ஜிடி-640-எம் கிராஃபிக்ஸ் தொழில் நுட்ப வசதியினை கொண்ட இந்த நோட்புக் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும் என்று தாராளமாக நம்பலாம். ஏசர் ஏஸ்பையர் டைம்லைன் அல்ட்ரா எம்-3 நோட்புக் ரூ.51,999 விலையினை கொண்டதாக இருக்கும்.

ஏசரின் வி-5 சிரீஸ் நோட்புக் மற்ற நோட்புக்களைவிட 30 சதவிகிதம் மெலிதான தோற்றத்தினையும், 10 சதவிகிதம் இலகு எடையினையும் கொண்டது. இத்தகைய நுட்பமான தொழில் நுட்ப வசதியினை கொண்ட இந்த வி-5 வரிசை நோட்புக் ரூ.27,999 விலையிலிருந்து ஆரம்பிக்கின்றன.

இன்டெல் கோர் பிராசஸர் கொண்ட வி-3 நோட்புக் என்விஐடிஐஏ ஜிஃபோர்ஸ் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தினை வழங்கும். கேம்ஸ், மூவீஸ் என்று இதில் பொழுதுபோக்கு அம்சத்தினையும் சிறப்பாக பெற முடியும்.

இந்த வி-3 சிரீஸ் லேப்டாப்பின் விலை ரூ.37,999 விலையில் இருந்து ஆரம்பமாகின்றது. ஏசர் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பங்களை வழங்கும் இந்த புதிய நோட்புக்குள், வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் அனுபவத்தினையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X