Home
Computer

ஏஸரின் புதிய வரவு-ஆஸ்பயர் 5755, 4755

By Super
ஏஸரின் புதிய வரவு-ஆஸ்பயர் 5755, 4755
பொதுவாக எல்லா லேப்டாப்களும் எல்லா வசதிகளையும் வழங்கி வருவதால் அதன் உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவர புதிய புதிய உத்திகளை கையாள்கின்றனர்.

அவற்றின் தொடர்ச்சியாக லாப்டாப் தயாரிக்கும் ஏஸர் நிறுவனம் புதிதாக தனது 2 படைப்புளான ஏஸர் ஆஸ்பையர் 5755 மற்றும் ஏஸர் ஆஸ்பையர் 4755 ஆகியவற்றை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துகின்றனர்.

இந்த இரண்டு லாப்டப்களும் பயன்படுத்துவதற்கு மிகவும் இயற்கை தன்மயுடன் எளிமையாக இருக்கும் என்ற முன்னுரையுடன் வருகின்றன. அவற்றின் நிறங்கள் இயற்கை நிறங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும். ஆஸ்பயர் 5755 மற்றும் 4755 இரண்டுமே பல நிறங்களில் கிடைக்கும்.

திரையின் அளவைப் பொறுத்த மட்டில் ஏஸர் ஆஸ்பையர் 5755 லாப்டாப் 15 இன்ச் அளவும், ஏஸர் ஆஸ்பையர் 4755 14 இன்ச் அளவும் கொண்டுள்ளன. இவை இன்டலின் ஐ5 ப்ராஸஸருடன் அதிவேக செயல்பாட்டுடன் இயங்கும் தன்மையில் உள்ளன. மேலும் அவை என்விஐடிஐஎ ஜிபோர்ஸ் ஜிடி 500 க்ராபிக்ஸ் ப்ராஸஸிங் யுனிட்டுடன் (NVIDIA GeForce GT 500 Graphics Processing Unit) விளையாட்டுகள் மற்றும் க்ராபிக்ஸ் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன.

இவை 750 ஜிபி ஹார்ட் டிஸ்குடன் உள்ளதால் மூவிஸ், வீடியோஸ், மீயூசிக் பைல்கள் மற்றும் திரைப்படங்கள் அகியவற்றை சேமிக்க முடியும். மேலும் இவை இயற்கை தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பதால் அது வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும் என நம்பலாம்.

இவை இரண்டும் வீடியோ கான்பரன்ஸ் மேனேஜர் சாப்ட்வேர் மூலம் வீடியோ சாட்டிங் செய்ய 1.3 மெகா பிக்ஸல் வெப்காம் உள்ளது. மேலும் அது ப்ளூடூத், வைபை மற்றும் பல யுஎஸ்பி போன்ற வசதிகள் உள்ளன. அதோடு இரண்டும் 2 இன்பில்டு ஸ்பீக்கர்கள் மற்றும் டிஜிட்டல் சவுன்டு தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளன.

இரண்டும் 5 நிறங்களில் ரூ. 27499லிருந்து கிடைக்கின்றன. இவை லேப்டாப் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X