Home
Computer

ஐகானியா டபிள்யூ-500 டேப்லெட்டை பிரபலபடுத்த முயலும் ஏசர்!

By Karthikeyan
ஐகானியா டபிள்யூ-500 டேப்லெட்டை பிரபலபடுத்த முயலும் ஏசர்!

ஏசர் ஐகானியா டபுள்யு 500 ஏற்கனவே 2011ல் நடைபெற்ற உலக மொபைல் காங்கிரசில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் பலருக்கு இந்த டிவைஸ் அறிமுகமாகி இருக்கிறது. இந்த டிவைசை இப்போது மீண்டும் இந்த ஆண்டு லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் காட்சிபடுத்தி இருக்கிறது ஏசர் நிறுவனம்.

கன்வெர்ட்டிபுள் லேப்டாப்புகளை வாங்க வேண்டும் என்றால் அதற்காக ஆசஸ் மற்றும் எச்பி போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது கன்வெர்ட்டிபுள் லேப்டாப்புகளை ஏராளமாகக் கடை விரித்து வைத்திருக்கின்றன. ஏசர் ஐகோனியா டேப் கன்வெர்ட்டிபுள் டேப்லெட் துறையின் புதிய சேர்க்கையாகும். ஆனால் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைமை ஒப்பிடும் போது அந்த அளவிற்று ஏசர் ஐகோனியா டபுள்யு 500 விற்பனையில் சாதனை படைக்க முடியவில்லை. அதே நேரத்தில் ஊடகங்களின் கவனத்தையும் கவர முடியவில்லை.

இந்த ஏசர் ஐகோனியா டபுள்யு 500 டிவைசின் சிறப்புகளை எடுத்துக் கொண்டால் இது விண்டோஸ் 7 இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 10.1 இன்ச் அளவு கொண்டு கெப்பாசிட்டிவ் தொடு வசதியை வழங்குகிறது. மேலும் எஎம்டி-சி50 டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இந்த டிவைஸ் எஎம்டி 6350 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்டைக் கொண்டுள்ளது. இதன் தடிமன் 16மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 970 கிராம் மட்டுமே.

ஏன் இந்த டேப்லெட் பலரின் கவனத்தையும் கவர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது முதலில் இதன் விண்டோஸ் 7 இயங்கு தளம் தொடுதிரைக்கு சரியான ஜோடியாக இருக்க முடியாது. மேலும் விண்டோஸ் 8 வந்து கொண்டிருக்கும் போது இந்த டேப்லெட் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் வந்தது. அதுபோல் ஒரு சில வல்லுனர்கள் கூறும் போது இந்த டேப்லெட்டின் உறுதியும் தரமாக இல்லை என்கின்றனர்.

அடுத்ததாகப் பார்க்கும் போது இந்த டேப்லெட்டை ஒரு லேப்டாப் போல மடித்து வைக்க முடியாது. ஏனெனில் இதன் கீபோர்டு மடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் இந்த டேப்லெட்டில் ட்ராக் பேடும் இல்லை. அதனால் நேவிகேசன் செய்வது மிக கடினமாக இருக்கும். இவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் இதன் ப்ராசஸர் மிக சக்தி வாய்ந்தது.

விலையைப் பொருத்தமட்டில் ஏசர் ஐகோனியா டபுள்யு 500 டேப்லெட் ரூ.40,000ல் வருகிறது. இது சற்று அதிகமான விலைதான். ஆனாலும் இந்த டேப்லெட் ஒரு சக்தி வாய்ந்த டேப்லெட் ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X