Home
Computer

10.1 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன் புதிய ஏசர் டேப்லெட்!

By Karthikeyan
10.1 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன் புதிய ஏசர் டேப்லெட்!

ஏசர் நிறுவனம் ஏசர் ஐகோனியா ஏ700 என்ற தனது புதிய டேப்லெட்டை விரைவில் நடைபெறவுள்ள நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த ஏசர் ஐகோனியா எ700 டேப்லெட் ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக இந்த டேப்லெட் குவாட்-கோர் என்விடியா டேக்ரா 3 மொபைல் பிராசஸரைக் கொண்டுள்ளது. இந்த பிராசஸரின் கடிகார வேகம் 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகும். இதன் டிஸ்ப்ளே 10.1 இன்ச் அளவில் 1920 x 1200 பிக்சல் ரிசலூசன் கொண்டு வருகிறது. மேலும் இதில் 1080பி எச்டி வீடியோ ரிசலூசனும் உண்டு.

இந்த ஐகோனியா டேப்லெட்டின் கேமராவைப் பார்த்தால் இது 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது 5 மெகா பிக்சல் கொண்ட முக்கிய கேமராவும் மற்றும் துணை கேமராவும் கொண்டுள்ளது. இதன் முக்கிய கேமராவில் ப்ளாஷ் இன்பில்ட்டாக உள்ளது. மேலும் இதில் உயர் டெபினிசன் கொண்ட வீடியோ ரிக்கார்டிங் வசதியும் உண்டு. இதன் 2வது கேமரா மூலம் வீடியோ கால் செய்வது மிக எளிதாக இருக்கும்.

இந்த ஐகோனியா டேப்லெட்டின் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் அது ப்ளூடூத் 3.0, வைபை 802.11, மைக்ரோ-எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ யுஎஸ்பி இணைப்பு மற்றும் 3.5 மிமீ ஆடியோ போர்ட் போன்ற அத்தனை இணைப்புகளையும் கொண்டுள்ளது. இதில் 3ஜி வசதியும் உண்டு. இந்த டேப்லெட்டின் மொத்த எடை 650 கிராம் மட்டுமே. மேலும் இது ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும்.

இந்த ஐகோனியா டேப்லெட்டின் படங்கள் இன்டர்நெட்டில் விரவிக் கிடக்கின்றன. அந்த படங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த டேப்லெட் ஒரு அடக்கமான டேப்லெட் ஆகும். இதன் டிசைன் மிக எளிமையாக இருக்கிறது. இதன் பின்புறம் ஏசரின் முத்திரை இருக்கிறது. இதை உள்ளங்கையில் மிக எளிதாக வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் இதை மிக எளிதாக எடுத்துச் செல்லவும் முடியும்.

இந்த டேப்லெட் ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட்டாக இருந்தாலும் ஆன்ட்ராய்டின் எந்த வெர்சனை இது கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் முதலில் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம்ப் வெர்சனைக் கொண்டு வரும். பின் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் வெர்சனை அப்டேட் செய்யும் என்று எதிர்பார்ர்க்ப்படுகிறது.

இந்த ஏசர் ஐகோனிய எ700 டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் போட்டி அதிகமாக இருப்பதால் இது குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X