Home
Computer

ஏசர் ஐகோனியா 10.1 இஞ்ச் டேப்லெட்: சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

By Karthikeyan
ஏசர் ஐகோனியா 10.1 இஞ்ச் டேப்லெட்: சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

இந்த வருடம் லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஏசர் ஐகோனியா எ700 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் இப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய டேப்லெட்டுக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த டேப்லெட் 10.1 இன்ச் அளவில் கெப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 1920 x 1200 பிக்சல்கள் ஆகும். அதுபோல் இதன் அடர்த்தி 9.9 மிமீ ஆகும். மேலும் இந்த டிஸ்ப்ளை 16எம் வண்ணங்களை உள்ளடக்கி இருக்கிறது. மேலும் இது மல்டி டச் வசதியைக் கொண்டது.

இந்த டேப்லெட்டின் பொழுதுபோக்கு அம்சங்களை எடுத்துக் கொண்டால் இந்த டேப்லெட் 5.1 டோல்பி டிஜிட்டல் ஆடியோ சப்போர்ட் கொண்ட ஆடியோ ப்ளேயர் மற்றும் வீடியோ ப்ளேயர் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. இதன் ரேம் 1ஜிபி டிடிஆர்2 ஆகும். அதுபோல் இதன் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். ஏனெனில் அதற்கான மைக்ரோ எஸ்டி கார்டை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.

இது ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும். இதன் இயங்குதளம் ஆன்ராய்டு 4.0 ஐசிஎஸ் ஆகும். இதன் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இந்த டேப்லெட் வைபை, எ2டிபியுடன் கூடிய ப்ளூடூத் வி3.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, மைக்ரோ 2.0 போர்ட்டுகள் மற்றும் எச்டிஎம்ஐ அவுட்புட் போன்ற வசதிகளை இந்த டேப்லெட் வழங்குகிறது.

இந்த டேப்லெட்டில் ஒலி அமைப்பு மிக பக்காவாக உள்ளது. அதற்காக சூப்பரான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் உண்டு. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக்கும் இந்த டேப்லெட்டில் உண்டு. இந்த டேப்லெட் 1300 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட க்வாட்கோர் டேக்ரா 3 சிபியுவைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டில் க்ராபிக்ஸ் ப்ராசஸரும் உண்டு.

மேற்சொன்ன வசதிகளைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் ஒரு உறுதியான டேப்லெட் என்று தெரிகிறது. ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் இந்த டேப்லெட் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X