ஏசரின் இரண்டு புதிய சக்தி வாய்ந்த டேப்லெட்டுகள்!

By Karthikeyan
|
ஏசரின் இரண்டு புதிய சக்தி வாய்ந்த டேப்லெட்டுகள்!

ஏசர் ஐகோனியா எ510 மற்றும் எ700 என்ற பெயரில் இரண்டு புதிய டேப்லெட்டுகளை சமீபத்தில் ஏசர் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு டேப்லெட்டுமே ஆன்ட்ராய்டு 4.0.1 இயங்கு தளத்தில் இயங்கக்கூடியவை. குறிப்பாக வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் வீடுகளில் பயன்படுத்துவோருக்கு இந்த டேப்லெட்டுகள் உதவிகரமாக இருக்கும்.

இந்த ஏசர் ஐகோனியா எ510 மற்றும் எ700 டேப்லெட்டுகளின் முக்கிய அம்சங்கள் பரவசத்தை ஏற்படுத்தும். இரண்டு டேப்லெட்டுகளுமே கூகுள் ஆன்ட்ராய்டு 4.0.1 இயங்குதளத்தைக் கொண்டிருக்கின்றன.

டிஸ்ப்ளேயைப் பொறுத்தவரை எ510 டேப்லெட் 10.10 இன்ச் அளவில் 1280 x 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட கப்பாசிட்டிவ் மல்டி டச் வசதி கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் எ700 டேப்லெட் 10 இன்ச் அளவில் 1920 x 1200 பிக்சல் ரிசலூசன் கொண்ட கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

ப்ராசஸரைப் பொருத்த மட்டில் இரண்டு டேப்லெட்டுகளும் 1300 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட க்வாட் கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டுள்ளன. அடுத்ததாக இரண்டுமே 5 மெகா பிக்சல் கொண்ட முக்கிய கேமராக்களைக் கொண்டுள்ளன. ஆனால் எ700ல் ப்ளாஷ் வசதி உண்டு.

அதுபோல் 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராக்கள் இந்த இரண்டு டேப்லெட்டுகளிலும் உண்டு. வீடியோ காலிங் மற்றும் வீடியோ ரிக்கார்டர் போன்ற வசதிகள் இந்த கேமராக்களில் உண்டு. எ700ன் முகப்பு கேமரா 1920x1080 அளவு வீடியோ ரிக்கார்டிங்கை சப்போர்ட் செய்யும்.

மெமரியைப் பொருத்தவரை இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 32 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி மற்றும் மைக்ரோ எஸ்டிஎச்சி ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ளன. மேலும் ப்ளூடூத் மற்றும் வைபை 802.11 பி/ஜி/என் போன்ற இணைப்பு வசதிகள் இரண்டிலும் உள்ளன.

அதுபோல் எ510ல் மைக்ரோ யுஎஸ்பி கனெக்டர் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் உள்ளன. ஆனால் எ700ல் யுஎஸ்பி கனக்டர் மட்டுமே உண்டு. மேலும் எ510ல் எச்டிஎம்ஐ போர்ட் இல்லை. ஆனால் இந்த வசதி எ700ல் உண்டு.

பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்தால் இரண்டு டேப்லெட்டுகளுமே ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் யுடியூப் சேவை ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளன. அதுபோல் எ510 எச்டிஎம்எல் மற்றும் ப்ளாஷ் வசதிகளைக் கொண்டு இருக்கின்றன. ஆனால் எ700 எச்டிஎம்எல் மட்டுமே கொண்டிருக்கிறது.

இரண்டு டேப்லெட்டுகளும் ஆன்ட்ராய்டு இயங்கு தளம் மற்றும் டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இவற்றின் இயங்கு திறனும் வேகமும் மிகவும் அமர்க்களமாக இருக்கும். மேலும் இதில் வீடியோ கேம்களை மிக அருமையாக விளையாட முடியும். அதுபோல் வீடியோ பார்ப்பது மற்றும் வெப் பரவுசிங் செய்வது ஆகியவை இதில் நன்றாக இருக்கும்.

விலையைப் பொருத்தமட்டில் எ510ன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ரூ.25000லிருந்து ரூ.30000க்குள் இருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் எ700 டேப்லெட்டின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மெமரி அளவைப் பொருத்து இதன் விலை வேறுபடும் என்ற தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X