மல்யுத்தம்: புதிய ஏசர், சோனி டேப்லெட்டுகள்!

By Super
|

மல்யுத்தம்: புதிய ஏசர், சோனி டேப்லெட்டுகள்!
ஏசர் மற்றும் சோனி நிறுவனங்கள் மொபைல் மற்றும் கணினி சந்தையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஏசர் நிறவனம் ஏசர் ஐகோனியா ஏ-500 என்ற டேப்லெட்டையும், சோனி நிறுவனம் சோனி டேப்லெட் எஸ் என்ற டேப்லெட்டையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இந்த 2 டேப்லெட்டுகளும் சிறந்த அம்சங்களைக் கொண்டு வருகின்றன.

ஏசர் ஐகோனியா ஏ-500 மற்றும் சோனி டேப்லெட் எஸ் ஆகிய இரண்டுமே ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகின்றன. இரண்டுமே என்விடியா டேக்ரா 2 ப்ராசஸரைப் கொண்டிருக்கின்றன.

ஏசர் 10.1 இன்ச் கொண்டு மேட்ரிக்ஸ் டிஎப்டி கலர் எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. சோனி டேப்லெட் 9.4 இன்ச் அளவுள்ள டிஸ்ப்ளேயுடன் 1280 x 800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டுள்ளது.

இந்த இரண்டு டேப்லட்டுகளுமே ப்ளூடூத், வைபை மற்றும் யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. அதுபோல் தரமான வீடியோ சப்போர்ட் வழங்கும் எச்டிஎம்ஐ போர்ட்டையும் இந்த 2 டேப்லட்டுகள் கொண்டுள்ளன.

பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஏசர் ஐகோனியா ஏ-500 டேப்லெட் 3260 மெகா ஹெர்ட்ஸ் 2 செல் லித்தியம் பாலிமர் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சோனி டேப்லெட் 8 மணி நேரம் வரை தொடர்ந்து இயங்கக்கூடிய 5,000 மெகா ஹெர்ட்ஸ் லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டுள்ளது.

துல்லியமான வீடியோ உரையாடலுக்காக ஏசர் இன்பில்ட் வெப்காமைக் கொண்டுள்ளது. ஆனால் சோனி 0.3 மெகா பிக்சல் முகப்பு கேமராவையும், 5 மெகா பிக்சல் ரியர் கேமராவையும் கொண்டுள்ளது. இந்த 2 டேப்லெட்டுகளுமே 1ஜிபி இன்டர்னல் மெமரி சேமிப்பைக் கொண்டுள்ளது. இரண்டுமே 32ஜிபி வரை விரிவுபடுத்தக் கூடிய மெமரி கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளன.

ஏசர் டேப்லெட்டின் எடை 765 கிராம்களாகும். அதே நேரத்தில் சோனி டேப்லெட்டின் எடை 468 கிராம்களாகும். சோனி டேப்லெட் ஐஆர் ரிமோட் கண்ட்ரோல், ஹெட்போன் அவுட்புட் மற்றும் எஸ்டி ஸ்லாட்டுடன் வருகிறது. ஏசர் டேப்லெட் இன்பில்ட் மைக்ரோபோனை கொண்டிருக்கிறது.

விலையைப் பொறுத்தமட்டில் ஏசர் ஐகோனியா ஏ-500 மற்றும் சோனி டேப்லெட் எஸ் ஆகியைவை இரண்டும் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X