Home
Computer

ஏஸர் ஐகோனிகா ஏ-101 மற்றும் ஆஸஸ் இஇஇ பேட் ஸ்லைடர் டாப் - ஒரு ஒப்பீடு

By Super
ஏஸர் ஐகோனிகா ஏ-101 மற்றும் ஆஸஸ் இஇஇ பேட் ஸ்லைடர் டாப் - ஒரு ஒப்பீடு
இந்திய சந்தையில் டாப்லட்டுக்களுக்கான தேவை மிகவும் அதிகரித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் நிறுவனங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மாறாக டாப்லட் தரமாக இருந்தால் அது எந்த நிறவனத்தைச் சார்ந்ததாக இருந்தாலம் அவற்றை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

இதை உணர்ந்திருக்கிற உற்பத்தியாளர்களும் தரமான டாப்லட்டுகளை சந்தையில் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்துகின்றனர். அந்த வரிசையில் ஸ்லைடர் டிஸைன் கொண்ட மொபைல்களுக்கு இப்போது வரவேற்பு மிக அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸஸ் நிறுவனம் ஸ்லைடர் டிஸைன் கொண்ட ஆஸஸ் இஇஇ பேட் எஸ்எஸ்101 என்ற டாப்லட்டையும் ஏஸர் நிறுவனம் ஏஸர் ஐகோனிக்கா டாப் எ101 என்ற டாப்லட்டையும் அறிமுகப்படுத்துகிறது.

ஏஸர் ஐகோனிக்கா டாப் எ101 எல்சிடி தொடுதிரையுடன் 16எம் வண்ணங்களை சப்போர்ட் செய்யும் வசதியுடன் வரவிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 600 X 1024 பிக்ஸல் கொண்ட 7 இன்ச் அளவாகும். இது ஸ்லீக் டஸைனுடன் அழகாக உள்ளது. தற்சுழற்சிக்கான அக்ஸிலர்மீட்டரும் உள்ளது. அதனால் அது சுழலும் போது அது லாண்டஸ்கேப் பரப்பை தன் வயப்படுத்திக் கொள்ளும். மேலும் இந்த மொபைல் ஹச்டிஎம்ஐ போர்ட் கொண்டிருப்பதால் இதைவிட பெரிய ப்ரொஐக்டர் மற்றும் டிவி போன்றவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம்.

ஏஸர் ஐகோனிக்கா டாப் எ101வின் கேமரா 5எம்பி ஆகும். இது 2592 X 1944 பிக்ஸல் கொண்டு ஆட்டோபோக்கஸ் மற்றும் எஸ்இடி ப்ளஷ் வசதியையும் கொண்டிருக்கிறது. ஆஸஸ் இஇஇ பேட் எஸ்எஸ்101 டாப்லட்டும் 5 எம்பி கேமராவுடன் எல்இடி மற்றும் ஆட்டோ போக்கஸ் வசதிகளைக் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமாரவும் கொண்டிருப்பதால் வீடியோ காலிங் செய்ய பேருதவியாக இருக்கும்.

ஏஸர் ஐகோனிக்கா டாப் எ101 மைக்ரோஎஸ்டியுடன் கூடிய 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 8ஜிபி இன்டர்னல் மெமரி சேமிப்பை பெற்றுள்ளது. மேலும் வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகள் இந்த மொபைலுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இது 2.0 யுஎஸ்பியும் கொண்டுள்ளது. ஆஸஸ் இஇஇ பேட் எஸ்எஸ்101ஐ எடுத்தக் கொண்டால் எல்லா வசதிகளுடன் ப்ளூடூத் 2.1யும் வைபை 802.11 பி/ஜி/என் போன்றவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஜிபிஆர்எஸ், இடிஜிஇ மற்றும் ஹச்எஸ்யுபிஎ போன்ற வசதிகள் இரண்டு மொபைல்களிலும் சம அளவில் உள்ளன.

ஏஸர் ஐகோனிக்கா டாப் எ101ன் இந்திய விலை ரூ.25,000 ஆகும். ஆஸஸ் இஇஇ பேட் எஸ்எல்-101 19ஜிபியுடன் ரூ. 18420க்கும் 32ஜிபியுடன் ரூ.24,000க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X