தீவாளி பரிசுகளை வாரி வழங்கும் ஏசர்

By Karthikeyan
|
தீவாளி பரிசுகளை வாரி வழங்கும் ஏசர்

இந்தியாவின் மிகப் பெரிய திருவிழா தீவாளி ஆகும். இந்த தீவாளி மிகவும் அண்மையில் இருக்கிறது. இந்த தீவாளியை முன்னிட்டு ஏராளமான கணினி மற்றும் மொபைல் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் விற்று வருகின்றன. அந்த வகையில் ஏசர் நிறுவனமும் தனது கல்லாவை நிறப்ப தனது கணனி மற்றும் மொபைல் சாதனங்களுக்கு கணிசமான அளவில் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது.

தனது அஸ்பையர் நோட்புக்குகளுக்கு ஏசர் செலிபரேசன் ஆபர் என்ற பெயரில் கணிசமான அளவில் விலைக் குறைப்பு செய்திருக்கிறது. சமீபத்தில் விண்டோஸ் 7 மற்றும் 8 ஆகிய இயங்கு தளங்களில் இயங்கக் கூடிய இரண்டு அஸ்பையர் நோட்புக்குகளை களமிறக்கியது ஏசர்.

இந்த தீவாளி காலத்தில் தனது இந்த இரண்டு நோட்புக்குகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக நவம்பர் 20 வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது ஏசர். இந்த தீவாளி தள்ளுபடியை அறிவிக்கும் போது ஏசரின் இந்தியா வர்த்தகத் தலைவர் ராஜேந்திரன் கூறும் போது இந்த ஆண்டின் இறுதி காலண்டு விற்பனை மிகவும் முக்கியமானது என்று தெரிவித்திருக்கிறார்.

வழக்கமாக தீவாளி காலங்களில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த 10 சதவீதத்தோடு ஒருசில பரிசுகளையும் வழங்க இருக்கிறது ஏசர். இதன் மூலம் இந்த தீவாளி சமயத்தில் ஏசரின் நோட்புக்குகளை வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏசரின் சாதனங்களும் இரண்டு வருட உத்திரவாதம் மற்றும் ரூ.3500 பெறுமானமுள்ள பரிசுகள் ஆகியவற்றையும் ஆசஸ் வழங்க இருக்கிறது.

மேலும் ஏசரின் அஸ்பையர் எஸ் மற்றும் எம் வரிசை அல்ட்ராபுக்குகளை வாங்குபவர்கள் ரூ.6,990 மதிப்புள்ள பிஜி டிஜிட்டல் கேமரா அல்லது பிலிப்ஸ் 5.1 ஸ்பீக்கர் ஆகியவற்றை வெல்லவும் வாய்ப்பிருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X