தேர்வு செய்ய வசதியாக பல மாடல்களில் வரும் புதிய ஏசர் நெட்புக்!

Posted By: Karthikeyan
தேர்வு செய்ய வசதியாக பல மாடல்களில் வரும் புதிய ஏசர் நெட்புக்!

சமீபத்தில் ஏசர் நிறுவனம் தனது வி3 வரிசையில் வரும் புதிய நோட்புக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நோட்புக் பல மாடல்களிலும் பல தொழில் நுட்பங்களிலும் வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் தமக்கு விருப்பமான மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த வி3 வரிசை நோட்புக்குகளின் செயல் திறன் மிக பக்காவாக இருக்கும். இவற்றில் பொழுதுபோக்கு அம்சங்களும் சூப்பராக உள்ளன. இந்த நோட்புக்குகளில் இண்டலின் ஐ3, ஐ5 மற்றும் ஐ7 ப்ராசஸர்கள் உள்ளதால் வாடிக்கையாளர் விரும்பும் ப்ராசஸரைத் தேர்ந்து கொள்ளலாம். அதுபோல் திரை அளவுகளிலும் வேறுபாடுகள் உண்டு. அதாவது இந்த நோட்புக்குகள் 14 அல்லது 15.6 அல்லது 17.3 இன்ச் அளவுகளில் வருவதால் விருப்பமானவற்றைத் தேர்ந்து கொள்ளலாம்.

க்ராபிக்ஸ் வசதிக்காக இந்த நோட்புக் என்விடியா ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் கார்டைக் கொண்டிருக்கிறது. இதில் எச்டிஎம்ஐ அவுட்புட்டுடன் கூடிய எச்டிடிவியும் உண்டு. இந்த நோட்புக் உயர் டெபினிசன் கொண்ட எல்இடி திரையைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு வசதிக்காக இந்த நோட்புக் வைபை, எஸ்எஸ்டி கார்டு, யுஎஸ்பி 3.0, ப்ளூ ரே டிஸ்க் ட்ரைவ் மற்றும் ப்ளூடூத் 4.0 போன்ற தொழில் நுட்பங்களையும் வழங்குகிறது. ஒலி அமைப்பிற்காக இந்த நோட்புக் டோல்பி ஹோம் தியேட்டர் சிஸ்டம் வி4ஐ வழங்குவதால் இதில் மிக அருமையான இசை அனுபவத்தைப் பெற முடியும்.

இந்த நோட்புக் சூப்பரான டிசைனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த நோட்புக் டான் கோல்டு, தன்டர்போல்ட் சில்வர், மிட்நைட் ப்ளாக் மற்றும் நைட்பால் க்ரே போன்ற அட்டகாசமான கலர்களில் வருகிறது. இதன் கீபோர்டு சிக்லெட் ஸ்டைலில் வருவதால் இதில நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். இதன் தொடுதளமும் மிக அகலமாக அட்டகாசமாக உள்ளது.

இந்த நோட்புக்கின் டிஸ்ப்ளே 1600 x 900 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இதன் வெப்காம் ஏசர் க்ரிஸ்டல் ஐ தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. மின் திறனிற்காக இந்த லேப்டாப் 6 செல் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதனால் இது நீண்ட நேர இயங்கு நேரத்தை வழங்கும்.

ஏசரின் இந்த புதிய நோட்புக்கின் விலை பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை. மேலும் இந்த நோட்புக் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot