ஏசரின் அல்ட்ராபுக் வரிசையில் ஓர் புதிய லேப்டாப்!

Posted By: Karthikeyan
ஏசரின் அல்ட்ராபுக் வரிசையில் ஓர் புதிய லேப்டாப்!

சமீபத்தில் ஏசர் தனது அல்ட்ராபுக் வரிசையில் ஏசர் அஸ்பயர் டைம்லைன் அல்ட்ரா எம்பி3 என்ற ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப்போடு வேறு 3 லேப்டாப்புகளையும் ஏசர் அறிமுகம் செய்தி இருக்கிறது. ஆனால் அந்த 3 லேப்டாப்புகளும் ஏசரின் அல்ட்ராபுக் வரிசையின் கீழ் வராது.

இந்த புதிய ஏசர் அஸ்பயர் டைம்லைன் அல்ட்ரா எம்பி3 லேப்டாப் இதனைப் பயன்படுத்துவோரின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஏராளமான முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது இந்த லேப்டாப் 15 இன்ச் அளவில் ஒரு நல்ல திரையைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப்பின் அடர்த்தி 20 மிமீ மட்டுமே.

இந்த புதிய லேப்டாப் இன்டல் கோர் ப்ராசஸர்களுடன் சேன்டி ப்ரிட்ஜ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் க்ராபிக்ஸ் கார்டும் இந்த லேப்டாப்பில் உண்டு. அதோடு ஆப்டிக்கல் ட்ரைவையும் இந்த லேப்டாப்பில் பார்க்கலாம். இந்த லேப்டாப் எஸ்எஸ்டி கார்டோடு எஸ்எஸ்டி+எச்டிடி உயர் ரக சேமிப்பு வசதியையும் வழங்குகிறது. இதன் பேட்டரி 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த லேப்டாப்பில் டோல்பி ஹோம் தியேட்டர் உள்ளதால் ஒலி அமைப்பும் பக்காவாக இருக்கும்.

இந்த லேப்டாப் மிக ஒல்லியாக இருப்பதால் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறது. இந்த லேப்டாப் அலுமினிய தகட்டினால் செய்யப்பட்டிருப்பதால் இது உறுதியாக நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும். இந்த லேப்டாப் கருப்பு நிறத்தில் இருக்கிறது. இதன் கீபோர்டு க்ரே நிறத்தில் வருகிறது. இதன் எடை குறைவாக இருப்பதால் இதை எடுத்துச் செல்வதும் மிக எளிதாக இருக்கும்.

இந்த லேப்டாப் விற்பனைக்கு வரும் தேதியும் மற்றும் இதன் விலை பற்றிய விவரமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்