கேம் பிரியர்களுக்காக ஏசரின் புதிய லேப்டாப்!

சமீபத்தில் ஏசர் சிபிட்டில் தனது புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு அஸ்பையர் டைம்லைன் அல்ட்ரா எம்3-581டிஜி என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய ஏசர் லேப்டாப் பலவிதமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் 15.6 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. என்விடியாவின் ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் ஜிபியு, 6ஜிபி ரேம் மற்றும் இன்டல் சாண்டி ப்ரிட்ஜ் ப்ராசஸர் போன்ற சூப்பரான அம்சங்களும் இந்த லேப்டாப்பில் உண்டு.
இந்த லேப்டாப் முழு அளவிலான சிக்லெட் கீபோர்டைக் கொண்டுள்ளது. மேலும் இரண்டு டிவிடி சூப்பர் மல்டி டிஎல் ஆப்டிக்கல் ட்ரைவ், இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அதிவேகம் கொண்ட எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 2.0 மற்றும் 3.0 போர்ட்டுகள் போன்ற அம்சங்களையும் இந்த லேப்டாப் வழங்குகிறது.
இந்த லேப்டாப்பில் வீடியோ கேம் பக்காவாக விளையாட முடியும். மேலும் இதன் பேட்டரி இந்த லேப்டாப்பிற்கு 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது
இந்த லேப்டாப்பின் இன்டர்னல் மெமரி சேமிப்பு 6ஜிபி ஆகும். மேலும் இந்த லேப்டாப்பில் க்ராபிக்ஸ் கார்டும் உள்ளது. அதோடு இந்த லேப்டாப்பில் உயர் தர வெப்காம் லென்ஸ், டோல்பி ஹோம் தியேட்டரி வி4, 4 இன் 1 கார்டு ரீடர் போன்ற தொழில் நுட்பங்களையும் பார்க்க முடியும்.
இந்த ஏசர் லேப்டாப் கேம் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதன் விலை ரூ.70000 ஆகும்.


Click it and Unblock the Notifications