மலிவு விலையில் வரும் ஏசர் நெட்புக்

Posted By: Staff

மலிவு விலையில் வரும் ஏசர் நெட்புக்
மலிவு விலையில் புதிய நெட்புக்கை விரைவில் அறிமுகப்படுத்துகிறது ஏசர். கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது. குறிப்பாக, ஆண்கள் க்ரே மற்றும் கருப்பு நிறத்தில் வரும் நெட்புக்குகளை அதிகம் விரும்புவர். ஆனால் இந்த புதிய நெட்புக் எந்த நிறத்தில் வந்தாலும் ஆண்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

இதன் செயல்திறனுக்கு நாம் உத்திரவாதம் தரலாம். இதன் எடை 2.5 பவுண்டு மட்டுமே. மேலும் இதன் தடிமனும் மிகக் குறைவே. இதன் விலையும் மலிவே. ஏசர் அஸ்பயர் ஒன் ஹேப்பி 2 நெட்புக் இண்டல் ஆட்டம் என்570 ப்ராசஸரில் இயங்குகிறது. மேலும் இது ஏசரின் அப்டேட் செய்யப்பட்ட 2010ன் மாடலாகும். இது 1ஜிபி ரேமும் டிடிஆர் 3 ரேமும் கொண்டிருப்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும்.

அதுபோல் இந்த நெட்புக்கின் மின்திறனும் பேட்டரி பேக்கப்பும் பக்காவாக உள்ளன. அதாவது 6.30 மணி நேரம் வரை தாங்கும் ஸ்டேண்ட்பை மோட் கொண்டது. இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 மற்றும் ஆண்ட்ராய்டு 2.3 ஆகும். இதனால் இந்த இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் டிஸ்ப்ளேயில் மட்டுமே பயன்படுத்த முடியும். பெரிய திரையில் பயன்படுத்த முடியாது. அதனால் இதில் ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதன் எஸ்கேப் பட்டனைத் தட்டினாலே நாம் இதன் எந்த அப்ளிகேசன்களிலுமிருந்த எளிதாக வெளியே வந்துவிடலாம்.

ஏசர் அஸ்பயர் ஒன் ஹேப்பி 2 நெட்புக் ப்ளூடூத் 3.0 மற்றும் வைபை வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இதன் எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் மெமரி கார்டையும் வைத்துக் கொள்ள முடியும். இதன் விலையைப் பார்த்தால் ரூ.16,000 மட்டுமே.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot