ரூ.20,000ல் வரும் புதிய ஏசர் நெட்புக்!

By Super
|

ரூ.20,000ல் வரும் புதிய ஏசர் நெட்புக்!
டேப்லெட்டுகள் மார்க்கெட்டை ஆக்கிரமித்து வருவதால் நெட்புக்குகளுக்கு மவுசு குறைந்து வருகிறது. இருப்பினும், டேப்லெட்டை விட மலிவான விலையில் நெட்புக்குகள் கிடைப்பதால் ஓரளவு நெட்புக்குகளுக்கான தேவையும் இருந்து வருகிறது.

நெட்புக்குகளுக்கான தேவையையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்டு ஏசர் ஆஸ்பயர் ஒன் 722 என்ற புதிய நெட்புக்கை ஏசர் அறிமுகப்படுத்துகிறது. மலிவான விலை என்று கூறமுடியாவிட்டாலும், வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காத விலையில் இந்த புதிய நெட்புக் வருகிறது.

11.6 இஞ்ச் எல்இடி பேக்லிட் திரை கொண்டுள்ள இந்த நெட்புக் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கைக்கு அடக்கமான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த நெட்புக் அலுவலகம் மற்றும் பயணங்களின்போது எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருக்கும்.

இதில், 1ஜிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ஏஎம்டி சி-50 ஏபியூ பிராசஸரும், 2 ஜிபி ரேமும் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், 320 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஹார்டு டிஸ்க்கை கொண்டுள்ளது.

சுற்றுச் சூழலுக்கு உகந்த அம்சங்களை கொண்டுள்ள இந்த நெட்புக் 1.35 கிலோ எடையை கொண்டதாக இருக்கிறது. மற்ற நெட்புக்குகளுடன் ஒப்பிடும்போது வெகு அழகாக இதன் பேனல்கள் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

எம்எஸ் ஆபிஸ் மற்றும் மெக்அஃபி ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் இன்ட்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது 2 ஜிபி சிஸ்டம் மெமரி கொண்டுள்ளதால் நெட்புக் ஆன் செய்யும்போது வெகு சீக்கிரத்திலேய பூட் ஆகிவிடும்.

இந்த புதிய நெட்புக் ரூ.20,000 விலையில் மார்க்கெட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X